Primary tabs
6.0 பாட முன்னுரை
நாட்டுப்புற வழக்காற்றிலுள்ள இலக்கிய வகைப்பாடுகளையும், கள ஆய்வினையும் புரிந்து கொண்டீர்கள், இவற்றை ஒரு குறிப்பிட்ட கட்டமைப்புக்குள் எங்ஙனம் அமைத்துள்ளனர் என்பதை இப்பாடப் பகுதி வாயிலாகத் தெரிந்து கொள்ள முடியும். ‘நாட்டுப்புறவியல் வரலாறு’ என்ற தலைப்பிலான பாடப் பகுதியில், முன்னுரைப் பகுதி ‘நாட்டுப்புறவியல் - ஓர் அறிமுகம்’ என்றால், முடிவுரையாக அமைவது ‘நாட்டுப்புறவியல் - கோட்பாடுகள்’ என்ற பாடப் பகுதியாகும்.