Primary tabs
-
2.0. பாட முன்னுரை
நாட்டுப்புற இலக்கிய வகைகளுள் ஒன்றான விடுகதை, மக்கள் அறிவுத்திறனின் வெளிப்பாடு. தாம் காணும் பொருட்களையும் செயல்களையும் பிறர் சிந்தித்து அறியும் வண்ணம் மறைபொருளாக உருவாக்கப்படும் இலக்கிய வடிவமே விடுகதை. மக்களிடையே-குறிப்பாக, சிறுவர் சிறுமியரிடையே - வாய்மொழி விளையாட்டாகச் செல்வாக்குடன் காணப்படும் இந்த இலக்கிய வடிவத்தினைச் சுட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் சொற்கள், விடுகதை சேகரிப்பு, பதிப்புப் பணிகள், விடுகதை வகைகள், சமுதாயத்தில் விடுகதைகளின் பங்கு, விடுகதைகள் காட்டும் சமுதாயம் ஆகிய விவரங்களை இப்பாடத்தில் காணலாம்.