தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A06136 நகைச்சுவைத் துணுக்குகள்

  • பாடம் - 6

    A06136 நகைச்சுவைத் துணுக்குகள்


    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    E

    இந்தப் பாடம் நகைச்சுவைப் பாடல்கள் என்றால் என்ன என்பதை விளக்குகிறது. நகைச்சுவைக் கதைகளை எவ்வாறு கதை சொல்பவர் தொடங்குகிறார், குறிப்பிட்ட ஊர் மக்களைப் பற்றி எவ்வாறு நகைச்சுவைக் கதைகள் சொல்லப்படுகின்றன என்பவற்றையும் தெரிவிக்கிறது.

    வாய் மொழியாக நாட்டுப்புறங்களில் வழங்கிவரும் நகைச்சுவைக் கதைகளும், துணுக்குகளும் எவ்வாறு உருவாகின என்பதை இப்பாடம் விளக்குகிறது.

    தொழில் தொடர்பான நகைச்சுவைக் கதை பற்றிக் கூறுகிறது. சமயோசிதம், விருந்து, மூடன், அறிவுரை, பேராசை. பொய் ஆகியவற்றை பற்றிக் கூறப்படும் நகைச்சுவைத் துணுக்குக் கதைகளைப் பற்றியும் கூறுகிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இப்பாடத்தை நீங்கள் படித்து இதில் உள்ள கற்றல் செய்கைகளை முழுமையாகச் செய்வீர்களேயானால் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்:

    • நகைச்சுவைத் துணுக்குகளின் முக்கியத்துவத்தையும் அவை மக்களைப் புரிந்துகொள்ள எவ்வாறு உதவுகின்றன என்பதையும் அறிவீர்கள்.
    • ஒரு நாட்டைப் பற்றியும், ஒரு மொழி பேசும் மக்களைப் பற்றியும், ஒரு தனிப்பட்ட ஊர் மக்கள் பற்றியும் தனி மனிதர்கள் பற்றியும் எவ்வாறு நகைச்சுவைத் துணுக்குகள் உருவாகுகின்றன என்பதை நன்கு அறிவீர்கள்.
    • சாதி மற்றும் பொருளாதாரத்தில் நலிந்தவர்களை ஏளனம் செய்ய மேல்தட்டு மக்கள் எவ்வாறு நகைச்சுவைத் துணுக்குகளை உருவாக்குகின்றனர் என்பதையும் அறிந்து கொள்வீர்கள்.
    • ஒரு சமுதாயத்தைப் பற்றி மற்றொரு சமுதாயம் எத்தகைய பொதுக் கருத்துக் கொண்டிருக்கிறது என்பதை நகைச்சுவைத் துணுக்குகள் வழி அறிவீர்கள்.
    • வாய்விட்டுச் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்வீர்கள்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:37:04(இந்திய நேரம்)