Primary tabs
6.4 தொகுப்புரை
நாட்டுப்புற இலக்கிய வகைகளுள் நகைச்சுவைத் துணுக்குகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை நகைச்சுவைக் கதைகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டவை. நகைச்சுவைத் துணுக்குகள் கதைகளாக விரித்துக் கூறப்படுவதும் நகைச்சுவைக் கதைகள் துணுக்குகளாகச் சுருக்கிக் கூறப்படுவதும் உண்டு.
தனி மனிதர்களையோ, இனங்களையோ இயக்கங்களையோ, நாடுகளையோ, கேலி செய்து நகைச்சுவைகள் உருவாக்கப்படுகின்றன. இவை மக்களின் இயல்புகளையும், பண்பு நலன்களையும் மன ஓட்டங்களையும் புரிந்து கொள்ளவும் அவர்களின் நகைச்சுவை உணர்ச்சியை அறிந்து கொள்ளவும் உதவுகின்றன. விருந்து உபசரித்தல் போன்ற எதார்த்தங்களைப் பற்றியும், மக்களின் சமயோசித புத்தி பற்றியும் உருவாக்கப்பட்ட நகைச்சுவைகள் சமுதாயத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளத் துணை செய்கின்றன. இவற்றைப் பற்றி இப்பாடம் சான்றுகளுடன் விளக்கியுள்ளது.