தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A06131 நாட்டுப்புறக் கதைகள்

  • பாடம் - 1

    A06131 நாட்டுப்புறக் கதைகள்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    E

    இந்தப் பாடம் நாட்டுப்புறக் கதைகளின் தன்மையையும், வகைகளையும் பற்றிக் குறிப்பிடுகிறது. நாட்டுப்புறக் கதைகள் எவ்வாறு உலகளாவிய நிலையிலும் தமிழகத்திலும் சேகரிக்கப்பட்டு, பதிப்பித்து ஆய்வு செய்யப்படுகின்றன என்பனவற்றையும் எடுத்துரைக்கிறது.

    மேலும், நாட்டுப்புறக் கதைகளின் பயன்பாடுகள் பற்றியும் கூறுகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?


    • தமிழ் நாட்டுப்புற இலக்கிய மரபில் உரைநடையாக எடுத்துரைக்கப்படும் நாட்டுப்புறக் கதைகளைப் பிற கதை வடிவங்களிலிருந்து வேறு பிரித்து அறிய இயலும்.
    • நாட்டுப்புறக் கதைகளின் வாய்மொழிப் பரவலின் முக்கியத்துவம் குறித்து அறிய இயலும்.
    • நாட்டுப்புறக் கதைகள் உலக அளவிலும் தமிழக அளவிலும் என்னென்ன நோக்கங்களுக்காகச் சேகரிக்கப்பெற்றன என்று அறியலாம்.
    • நாட்டுப்புறக் கதைகளின் வகைகளை அறிந்து அவை ஒவ்வொன்றின் சிறப்புகளை உணரலாம்.
    • நாட்டுப்புறக் கதைகளில் நிகழ்ந்துள்ள ஆய்வுகளை அறிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:30:16(இந்திய நேரம்)