தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A06132 விடுகதைகள்

  • பாடம் - 2

    A06132 விடுகதைகள்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    E

    இந்தப் பாடம் விடுகதை என்றால் என்ன என்பதையும், விடுகதைகள் எவ்வாறு சேகரிக்கப்பட்டுப் பதிப்பிக்கப் படுகின்றன என்பதையும் எடுத்துரைக்கிறது. விடுகதைகளின் வகைகளைக் கூறுவதோடு, அவை இயற்றப்படும் சூழலையும் பயனையும் குறிப்பிடுகின்றது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?


    • தமிழ் நாட்டுப்புற இலக்கிய வகைகளுள் தமிழர்களின் அறிவுத்திறன் வெளிப்பாடாக விளங்கும் விடுகதைகளை இனம் பிரித்து அறிய இயலும்.
    • தமிழகத்தில் பண்டைக் காலம் முதல் இன்றுவரை விடுகதைகளைச் சுட்டுவதற்கு என்னென்ன சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன-வருகின்றன என்பதை அறிய இயலும்.
    • விடுகதைகளின் சேகரிப்புப் பணி பற்றியும் சிறந்த விடுகதைத் தொகுப்புகள் பற்றியும் அறியலாம்.
    • விடுகதைகளின் வகைகளை அறிந்து அவற்றின் சிறப்புகளையும் இலக்கியச் சுவையையும் அறிந்து பயன் பெறலாம்.
    • விடுகதைகள் தமிழகத்தில் எவ்வெச் சூழல்களில் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் அவற்றின் பயன்களையும் உணரலாம்.
    • சமுதாயத்தைப் புரிந்து கொள்வதற்கு விடுகதைகள் எவ்வாறு துணை செய்யும் என்பதை அறியலாம்.
    • புதிய செய்திகளை, சிறுவர்களுக்கு உணர்த்துவதற்கு, புதிய விடுகதைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:31:54(இந்திய நேரம்)