Primary tabs
-
5.0. பாட முன்னுரை
உலகம் முழுவதும் பழமொழிகள் காணப்படுகி்ன்றன. எழுத்து மொழியல்லாத பேச்சுமொழி மட்டுமே உள்ள மக்களிடையே கூடப் பழமொழிகள் எழுதப்படாத சட்டங்களாகச் செயல்படுகின்றன என்பதை ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். தமிழர்களிடையே வழங்கி வரும் பழமொழிகளின் வரையறை, பழமொழிகளின் இயல்புகள், பழமொழிகளின் சேகரிப்பு, மற்றும் பதிப்பு ஆய்வுப்பணிகள், பழமொழிகளின் பயன்பாடுகள், அவை வெளிப்படுத்தும் தமிழர் தம் அறிவுத் திறன்கள், மரபுத் தொடர், விடுகதை, கதை ஆகியவற்றோடு பழமொழி கொண்டுள்ள உறவுகள் போன்றவற்றை இப்பாடத்தில் காணலாம்.