Primary tabs
-
தோற்பாவைக் கூத்து
பாவைக் கூத்து, தோற்பாவைக் கூத்து, தோற்பாவை நிழற்கூத்து என்ற பெயர்களில் இக்கலை வழங்கப்படுகிறது. தோலினாலான உயிரற்ற
பாவைகளை உயிருள்ள மாந்தர்களாய் மாற்றிக் கலைஞர்களால்
நிகழ்த்தப்படும் கூத்தாக தோற்பாவைக்கூத்து விளங்குகிறது.
மராட்டியைத் தாய்மொழியாகக் கொண்ட ராவ் என்னும் பிரிவினரால்,
குடும்பக் கலையாக இது நிகழ்த்தப்படுகிறது. திரைகட்டி அதன் பின்னே
தோற்பாவைகளை இயங்கச் செய்து இக்கூத்து நிகழ்த்திக் காட்டப்படுகிறது.
தோற்பாவைக் கூத்தில் இராமாயணக் கதைகளே மிகுதியும்
நிகழ்த்திக் காட்டப்படுகின்றன. சிறுவர்களை மகி்ழ்விப்பதற்காக
உச்சிக்குடும்பன், உழுவத்தலையன் என்ற நகைச்சுவைப் பாத்திரங்களும்
கிடாய்ச் சண்டை (ஆட்டுக்கிடாய்கள் சண்டையிடுவது) என்னும்
நிகழ்ச்சியும் இடம்பெறுகின்றன.
தோற்பாவைக் கூத்து சீனாவில் தோன்றிப் பிறநாடுகளுக்குப்
பரவியதாகக் கூறப்படுகிறது.