Primary tabs
-
பகல் வேடம்
புராணக் கதைமாந்தர்களைப்போல வேடமிட்டுப் பகல் நேரங்களில்
வீடுவீடாகச் சென்று பாடல்பாடி உரையாடி நிகழ்த்தப்படும் கலையாகப்
பகல் வேடம் விளங்குகிறது. பகலில் வேடமிட்டு நிகழ்த்தப்படுவதால்
இது பகல் வேடம் என்று பெயர் பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட
ஒரு இடத்தில் மட்டும் கதை எடுத்துரைக்கப்படாமல் செல்லும்
இடமெல்லாம் உதிரியாகப் பாடல்களைப் பாடிச்செல்லும் நடமாடும்
நிகழ்கலையாக இது உள்ளது. கிருஷ்ணர், இராமர், சீதை, அனுமராக
வேடம்புனைந்து இராமாயணம், மகாபாரதக் கதைச் சம்பவங்களைப்
பாடியும் உரையாடியும் நடித்தும் எடுத்துரைத்துச் செல்வர். தெலுங்கைத்
தாய்மொழியாகக் கொண்ட குல்லுக்கவர நாயுடு என்ற இனத்தாரே
இக்கலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
( பகல் வேடம் )
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக