தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Page 1-வில்லுப் பாட்டு

  • வில்லுப்பாட்டு

    வில் என்ற இசைக்கருவியைக் கோலால் அடித்து ஒலி எழுப்பிப்
    பாடியும் உரையாடியும் நிகழ்த்தப்படும் கலை வில்லுப்பாட்டு ஆகும்.
    வில்லிசை, வில்லடிச்சான் பாட்டு என்றும் இது வழங்கப்படும்.
    தமிழகத்தின் தென்மாவட்டங்களில் உள்ள சிறு தெய்வக்கோயில்களின்
    வழிபாட்டில் வில்லுப்பாட்டு தவறாமல் இடம்பெறும்.

    தலைமைப்பாடகர், பின்பாட்டுக்காரர், இசைக்கருவி வாசிப்போர்
    என்று வில்லுப்பாட்டுக்குழுவில் ஆறுபேர் இடம்பெறுவர்.

    வில்லுப்பாட்டில் முதன்மை இசைக்கருவியாக விளங்குவது வில்
    ஆகும். நீளமாக அமையும் இந்த வில்லின் இருபுறமும் மணிகள்
    கட்டப்பட்டிருக்கும். தலைமைப்பாடகர் கையிலுள்ள கோல்களினால்
    வில்லினை அடிக்க இனிய இசை எழும்பும். வில்லுப்பாட்டில் மற்றொரு
    முக்கிய இசைக்கருவி உடுக்கை ஆகும். வெண்கலத்தாலான சிறிய
    உடுக்கையே வில்லுப்பாட்டில் பயன்படுத்தப்படுகிறது.     அடுத்துச்
    சிறப்பிடம் பெறுவன குடம் அல்லது பானைத்தாளம், ஆர்மோனியம்,
    வில்லுப்பாட்டில் இடம்பெறும் பாடல்களும் அதற்கேற்ப அமையும் இசையும் கேட்போரை வெகுவாகக் கவரும்.

    சிறுதெய்வக் கதைகள், இராமாயணம், சிலப்பதிகாரம், நாயன்மார்
    கதைகள், காந்திமகான் கதை     போன்றவை     வில்லுப்பாட்டில்
    எடுத்துரைக்கப்படுகின்றன. அரசின் திட்டங்கள், விழிப்புணர்வுக்
    கருத்துகள் போன்றவற்றை மக்களிடையே பரப்பும் பணியில்
    வில்லுப்பாட்டு முக்கியப் பங்காற்றி வருகின்றது.


புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:45:18(இந்திய நேரம்)