Primary tabs
-
காவடி ஆட்டம்
காவடி என்ற ஆட்டக்கருவியைத் தோளில் சுமந்து கொண்டு
நையாண்டி மேளத்தின் இசைக்கேற்ப ஆடப்படும் ஆட்டம் காவடி
ஆட்டம் ஆகும். காவடி என்பது முருகன் வழிபாட்டோடு
தொடர்புடையதாகும். தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற
விழாநாட்களில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காகக் காவடி
எடுத்து அருளோடு கூட்டமாக ஆடிவருவது வழக்கமாக உள்ளது.
இவ்வாறு முருகன் வழிபாட்டில் சடங்காக நிகழ்த்தப்பட்டு வரும் காவடி
எடுத்தல் சடங்கே பின்னாளில் காவடியாட்டம் என்ற கலைவடிவமாக
மாறி வளர்ந்துள்ளது. ஒருவரால் மட்டுமே நிகழ்த்தப்படும்
ஆட்டக்கலையாக விளங்கும் காவடியாட்டம் தனித்தநிலையில்
அல்லாமல் கரகாட்டத்தின் துணை ஆட்டமாக ஆடப்பட்டு வருகிறது.
காவடியாட்டம் ஆடும் கலைஞரின் திறன் வெளிப்பாட்டிற்கேற்ப
அதாவது காவடியைத் தலையில் வைத்து ஆடுவது, கழுத்தில் வைத்து
சுழற்றுவது, உடல்முழுக்கக் காவடியை நகர்த்திச் செல்வது, வளைந்து
வயிற்றில் வைத்து ஆடச்செய்வது போன்றவற்றிற்கேற்பப்
பார்வையாளரின் கருத்தைக் கவரும்.
( காவடியாட்டம்)
பெரிதாயக் காணப் படக்காட்சியை அழுத்துக