தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Page 1-தப்பாட்டம்

  • தப்பாட்டம்

    தப்பு என்னும் தோலிசைக் கருவியை அடித்து இசையெழுப்பி
    அதற்கேற்ப ஆடும் ஆட்டம் தப்பாட்டம் ஆகும். இது பறையாட்டம்,
    பறைமேளம், பறையடித்தல், தப்படித்தல் என்றும் வழங்கப்படுகிறது.
    தப்பாட்டத்தில் பாடல் இடம்பெறுவதில்லை. தப்பின் இசையும்
    அதற்கேற்ற ஆட்டமுமே முதன்மை பெறுகின்றன.

    தப்பாட்டம் ஆடுவோர் நேர்வரிசையிலும் எதிர்எதிராக நின்றும்
    வட்டமாகவும் ஆடுகின்றனர். சுழன்று ஆடுதல், குதித்தல், பல்டி
    அடித்தல் போன்ற விறுவிறுப்பான ஆட்டமுறைகள் பார்ப்போரை
    வியப்பில் ஆழ்த்தும். தப்பாட்டம், ஆடுவோரை மட்டுமல்லாது
    பார்ப்போரையும் ஆடத்தூண்டும் துள்ளல் இசையைக் கொண்டதாகும்.
    ஆண்களால் மட்டுமே ஆடப்பட்டுவந்த தப்பாட்டம் இன்றைய
    நிலையில் பெண்களாலும் கல்லூரி மாணவர்களாலும் விரும்பி
    ஆடப்பட்டு வருகின்றது.


    ( தப்பாட்டம் )
    பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக


புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:45:32(இந்திய நேரம்)