Primary tabs
-
4.0 பாட முன்னுரை
பாரதியார், அளவிலும் உள்ளடக்கத்திலும் பெருமை வாய்ந்த மூன்று பாடல்களைப் பாடியுள்ளார். அவை
1. கண்ணன் பாட்டு
2. பாஞ்சாலி சபதம்
3. குயில் பாட்டுஎன்பன. மூன்றும் மூன்று வகைக்கு உரியவை.
இக்கட்டுரை,
1. இப்பாடல்களைப் பாடுவதற்கான பின்புலம்
2. பாடல்களின் பொதுக்கருத்து,
3. பாடல்களின் உள்ளுறை
4. பாடல்களைப் படைத்த நோக்கம்என்ற நான்கு கூறுகளை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
கண்ணன்பாட்டு, பாரதியார் சமயத் தத்துவங்களைத் தாண்டிச் சென்ற நிலையையும், பாஞ்சாலி சபதம் நிகழ்காலச் சிக்கல்களை ஆழமாக ஊடுருவிப் பார்க்க ஒரு பழைய இதிகாசக் கதை மறுவார்ப்பாகப் பயன்படுத்தப் பெறும் பாங்கையும், குயில்பாட்டு, இறைவனுக்கும் உயிருக்கும் உள்ள அத்வைதத் தத்துவத்தை உருவகமாக விவரிக்கும் அழகையும் காட்டுகின்றன என்பதை இப்பாடம் விளக்கியுள்ளது.