தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

C01135 பாரதிதாசன் பார்வையில் குடும்பம் - 1

 • பாடம் - 5  
   
  C01135 பாரதிதாசன் பார்வையில் குடும்பம் - 1  
   

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

   

  E

  மனித சமுதாயத்தின் அடிப்படை, குடும்பம் ஆகும். குடும்ப அமைப்பு, சிறந்த முறையில் அமைந்தால் அதை நல்ல குடும்பம் என்கிறோம். ‘நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்’ என்று பாரதிதாசன் நல்ல குடும்பத்தைப் பல்கலைக்கழகத்துடன் ஒப்புமைப்படுத்தியுள்ளார்.

  குடும்ப அமைப்பில் பெண், முதன்மை இடத்தைப் பெறுகிறாள். காலை முதல், இரவு வரை குடும்பத்திற்காகக் கடமை ஆற்றும் பெண்ணை இந்தப் பாடத்தில் பாரதிதாசன் படம் பிடித்துக் காட்டுகிறார்.

  குடும்பக் கடமையுடன் அந்தப் பெண், தமிழ் வளர்ச்சியிலும் பொதுநலத்திலும் ஆர்வம் கொண்டு இருப்பதையும் இந்தப் பாடம் தெரிவிக்கிறது.


  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
   

  இப்பாடத்தைக் கற்போர் கீழ்க்காணும் பயன்களைப் பெறுவர்:

  • ஒரு நல்ல குடும்பம் பற்றிய பாரதிதாசனின் கருத்தை அறிதல்

  • குடும்பத்தில் பெண்ணுக்குரிய இடம், பெண்ணின் கடமை - ஆகியவற்றைப் பாரதிதாசனின் பார்வையில் காணல்

  • பாரதிதாசனின் பொதுநலப்பார்வையின் தீவிரத்தை அடையாளம் காட்டுதல்

  இவற்றோடு பாரதிதாசனின் கவிதை நடையில் காணும் எளிமை, நாடகக்கூறு, நகைச்சுவை போன்றவற்றை உணர்ந்து, அவர் கவிதைகளைப் படிப்பதில் ஓர் ஆர்வத்தை இப்பாடம் உண்டாக்கும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:53:31(இந்திய நேரம்)