தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

C01134 பாரதிதாசனின் பகுத்தறிவுப் பார்வை

 • பாடம் - 4

  CO1134 பாரதிதாசனின் பகுத்தறிவுப் பார்வை
   

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
   

  E

  அறிவுக்குப் பொருந்தாத கருத்துகளை மறுப்பதும் அறிவுக்குப் பொருந்தும் கருத்துகளை ஏற்பதும் பகுத்தறிவு என்பதை இந்தப் பாடம் தெரிவிக்கிறது.

  சாதிப் பிரிவினையால் மனித சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள பிரிவினைகளையும் மதங்களால் ஏற்பட்டுள்ள பிணக்குகளையும் எடுத்துக்காட்டி, சாதி, சமயச் சண்டைகள் இல்லாத உலகுக்கு இந்தப் பாடம் வழிகாட்டுகிறது.

  மூடநம்பிக்கையை ஒழித்து வாழ்வில் நன்னம்பிக்கையை வளர்த்திடும் வழிகளை உணர்த்துகிறது. கடவுள் பற்றிய பாரதிதாசனின் எண்ணங்களையும் இந்தப் பாடம் எடுத்துரைக்கிறது.


  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
   

  • சாதி, சமயம், மூடப்பழக்க வழக்கங்கள் ஆகியவை குறித்து மக்களிடையே பகுத்தறிவு நோக்கில் விழிப்புணர்ச்சி உண்டாக்கும் பொருட்டு, பாரதிதாசன் எடுத்துக் கொண்ட கவிதை முயற்சிகள்.

  • மதத்தைப் பற்றியும் மதவாதிகள் பற்றியும் கவிஞர் கொண்டிருந்த தீவிரமான எண்ணங்கள், மூடத்தனத்திற்கு எதிராக, கலப்புத்திருமணம், விதவை மறுமணம் ஆகியவற்றிற்கு ஆதரவாகக் கவிஞர் எழுப்பும் குரல்.

  • சாதி மதப் பாகுபாட்டை ஒழித்து, பொதுவுடைமைச் சமுதாயம் காண, சுயமரியாதை இயக்கம் தான் வழி என்ற கவிஞரின் முடிவு போன்ற செய்திகளை இப்பாடத்தின் மூலம் அறியலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:51:56(இந்திய நேரம்)