தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 4.0-பாட முன்னுரை

  • 4.0 பாட முன்னுரை
     

    பாரதிதாசன் புரட்சிக் கவிஞர் என்று பாராட்டப்படுகிறார். புரட்சி என்பது மாறுபட்ட சிந்தனையை வெளிப்படுத்தும் செயல் ஆகும். இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் நிலவிய சாதிக் கொடுமை, சமயச் சண்டை, அறியாமை, மூடப்பழக்க வழக்கம் முதலியவற்றுக்கு எதிராகத் தமது பகுத்தறிவுக் கருத்துகளைப் பாரதிதாசன் பாடியுள்ளார். எனவேதான், அவர் புரட்சிக் கவிஞர் என்று போற்றப்படுகிறார். அறியாமையில் மூழ்கி இருந்த மக்களுக்கு அடிப்படை அறிவைக் கொடுக்க எண்ணினார் பாரதிதாசன். அதன் பின்னர் அவர்களைப் பகுத்து அறியும் சிந்தனை உடையவர்களாக உயர்த்த எண்ணினார். ஆகவே, தமது பாடல்களில் எங்கு எல்லாம் பகுத்தறிவுச் சிந்தனையைப் புகுத்த முடியுமோ அங்கு எல்லாம் பாரதிதாசன் புகுத்தி உள்ளார்.
     

    • பகுத்தறிவ
     

    அறிவுக்குப் பொருந்தாத கருத்துகளை மறுப்பதும் அறிவுக்குப் பொருந்தும் கருத்துகளை ஏற்பதும் பகுத்தறிவு ஆகும். இந்தச் சிந்தனை உடையவர்களைப் பகுத்தறிவாளர்கள் என்கிறோம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:51:10(இந்திய நேரம்)