தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

C01136 பாரதிதாசன் பார்வையில் குடும்பம் - 2

 • பாடம் - 6
   
  C01136 பாரதிதாசன் பார்வையில் குடும்பம் - 2
   

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
   

  E

  ஒரு குடும்பம் சிறந்து விளங்க வேண்டும் என்றால் அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவரும் தங்கள் கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதை இந்தப் பாடம் தெரிவிக்கிறது.

  பண்டைத் தமிழர்கள் விருந்தோம்பலைத் தங்கள் கடமையாகக் கொண்டு வாழ்ந்தனர். அந்த விருந்தோம்பல் பண்பில் சற்றும் குறைவு இல்லாமல் விருந்தோம்பும் தலைவியை இந்தப் பாடம் அறிமுகம் செய்கிறது.

  நல்ல பொறுப்புள்ள தலைவி வாழும் குடும்பம் சிறந்து விளங்கும் என்பதைக் குடும்ப விளக்கில் காட்டிய பாரதிதாசன், பொறுப்பற்ற தலைவி வாழும் வீட்டை இருண்ட வீடாகக் காட்டியிருப்பதையும் இந்தப்பாடம் அறிவிக்கிறது.


  இந்தப்பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
   

  • ஓர் இலட்சியக் குடும்பத்தின் தலைவன் மற்றும் குடும்பத்தில் உள்ள முதியவர்கள் குடும்பத்திற்காக ஆற்ற வேண்டிய கடமைகளை விவரித்தல்.

  • கடமைகள் உணர்த்தும் பாரம்பரிய விழுமியங்களை (சிறப்புகளை) எடுத்துரைத்தல்

  • தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பும் முறை, விருந்து படைக்கும்பொழுது கருத்தில் கொள்ள வேண்டியவை - ஆகியவற்றை விளக்குதல்

  • ஒரு குடும்பம் எப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்பதை ‘இருண்ட வீட்டு’க் கதையின் வழியாக எடுத்துக் காட்டுதல்

  • அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளும், சாதாரண வழக்குச் சொற்களும் கவிஞர் கையாளும்போது வியக்கத்தக்க கவிதைப் பரிமாணம் (அளவு) பெறுவதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல்

  • பாரதிதாசனின் கவிதையில் இழையும் நகைச்சுவை உணர்வையும், நகைச்சுவைக்கு ஆதாரமான காரணிகளையும் இனங்காணல்

  • பாரதிதாசனின் கவிதையில் காணும் உவமை நயத்தைப் பாராட்டுதல் ஆகிய திறமைகளைப் பெறலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:55:07(இந்திய நேரம்)