தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

C01131 பாரதிதாசன் ஓர் அறிமுகம்

  • பாடம் - 1

    C01131  பாரதிதாசன் ஓர் அறிமுகம்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    E

    இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை உலகில் பெருவேந்தர்களாகத் திகழ்பவர் இருவர். ஒருவர் சுப்பிரமணிய பாரதியார்; மற்றொருவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். பின்னவரைப் பற்றிய ஓர் அறிமுகமே இப்பாடம் .

    பாரதியார், பாரதிதாசன்

    இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை
     உலகில் பெருவேந்தர்கள்

    இந்தப் பாடம் பாரதிதாசனின் இளமைப் பருவம், அவருடைய கல்வி முயற்சிகள், அவர் பிறந்த புதுச்சேரியின் அப்போதைய அரசியல் சூழல், பாரதிதாசனின் ஆசிரியர்கள், அவருடைய தமிழாசிரியப் பணி, அவர் ஏற்ற அல்லல்கள், அவருடைய போராடும் மன இயல்பு, துணிந்த நெஞ்சம், சமூகக் காவலராக ஆற்றிய பணிகள், அவருடைய தேசிய நோக்கு ஆகியவற்றை எடுத்துரைக்கின்றது.

    பாரதியாரோடு ஏற்பட்ட முதல் சந்திப்பு, அதன் விளைவுகள் பற்றி இப்பாடம் விவரிக்கின்றது.

    பெரியார் ஈ.வே. இராமசாமி அவர்களின் ‘குடியரசு’ பத்திரிகை அவரிடத்து உண்டாக்கிய மாற்றத்தை இந்தப் பாடம் விளக்குகின்றது. சுயமரியாதை இயக்கத்தவராக அவர் வளர்ந்த வகையையும் இப்பாடம் கூறுகின்றது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
     

    • சுப்புரத்தினம் என்பவர் எவ்வாறு பாரதிதாசன் என்று ஆனார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

    • பாரதிதாசன் எப்படிப் புரட்சிக் கவிஞர் ஆனார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

    • மிகப்பெரிய கவிஞர் ஒருவரின் வாழ்க்கைக் குறிக்கோள் எவ்வாறு அமைந்தது என்பதை இப்பாடம் தெளிவுபடுத்துகின்றது.

    • கவிஞர் ஒருவர் சமூகத்தை நோக்குவதில் மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தார் என்பதை இப்பாடம் புரியவைக்கின்றது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:46:31(இந்திய நேரம்)