தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 1.1-குயில் பிறந்த கூடு

  • 1.1 குயில் பிறந்த கூடு

    E

    புதுச்சேரியில் காமாட்சியம்மன் கோயில் தெருவில் தானிய வணிகம் செய்து வந்த கனகசபை என்பார் வாழ்ந்து வந்தார். இவருக்கு மனைவியர் இருவர். இரண்டாம் மனைவியின் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார் சுப்புரத்தினம். இந்தச் சுப்புரத்தினமே பிற்காலத்தில் பாரதிதாசன் எனப் புகழ்பெற்ற நம் கவிஞர். 1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் 29ஆம் நாள் புதன்கிழமை இரவு பத்தேமுக்கால் மணிக்கு இவர் தோற்றம் நிகழ்ந்தது. பாரதிதாசனின் தந்தையார் இராமலிங்க அடிகளாரோடு தொடர்பு உடையவர். இராமலிங்க சுவாமிகள் என்ற வள்ளலார் பாரதிதாசனின் தந்தையாருக்குக் கடிதங்கள் எழுதியிருக்கிறார். பாரதிதாசனின் தந்தையாருக்கு நாடகக் கலையில் ஈடுபாடு மிகுதி. வெளியூர் சென்று சிறந்த நாடகங்களைப் பார்த்து வருவார். தம் ஊரிலேயே சிறந்த நாடகங்களைக் கொண்டுவந்து அரங்கேற்றுவார். தந்தையிடம் அமைந்திருந்த இந்தக் கலை ஈடுபாடே, மைந்தனின் இரத்தத்திலும் ஊறிவந்தது போலும்! பாரதிதாசன் பற்பல நாடகங்களைப் பிற்காலத்தில் படைத்தார் என்பது சிந்திப்பதற்கு உரியது.

    காமாட்சியம்மன் கோயில் தெரு வள்ளலார்

    பாரதிதாசன் படைத்த நாடகங்கள்

    நம் பாட்டுக் குயில் பிறந்த புதுவையில் அன்று சைவம், வைணவம் என்ற சமயங்கள் இருந்தன. பற்பல சாதிகள் இருந்தன. அவற்றிடையே வேறுபாடுகளும் தீண்டாமையும் இருந்தன. பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகள் கல்வி உலகில் இடம் பெற்றிருந்தன.

    தமிழகத்திலிருந்தும், இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும் தேசபக்தர்கள் அடைக்கலமாகச் சென்று வாழ்வதற்குரிய பகுதியாக அன்று இருந்தது புதுவை. அரவிந்தர், பாரதியார், வரகனேரி வேங்கட சுப்பிரமணிய ஐயர், வ.ராமசாமி போன்றோர் அங்கு வந்து தங்கினர். பாரதிதாசனுக்கு இவர்களோடு நெருக்கமான தொடர்பு ஏற்படுவதற்குப் புதுவை, வாய்ப்பு நல்கியது. அந்தப் புதுச்சேரி இன்று இல்லை. அதற்குப் போகின்ற வழி வேண்டுமா?

    வ.ரா.

    என்று புரட்சிக் கவிஞரின் மொழியிலேயே சொல்லலாம்.

    1.1.1 புதுவையின் அரசியல்

    எட்டு மணிநேர வேலைச் சட்டம்

    ஆயி மண்டபம்

    1666இல் பிரெஞ்சுக்காரர்கள் வாணிக நோக்கத்தோடு இந்தியா வந்தனர். அவர்கள் ஆங்கிலேயரோடும் ஹாலந்துக்காரர்களோடும் போட்டியிட வேண்டிய சூழலில் சென்னையை விட்டுவிட்டுப் புதுச்சேரியை அடைந்தனர். புதுச்சேரி அப்போது ஒரு சிறிய ஊராக இருந்தது. அங்குப் பிரெஞ்சுக்காரர்கள் கோட்டை கட்டினர். புதுச்சேரியை நகராக்கி 150 ஆண்டுகள் அங்கு நிலையாகப் பிரெஞ்சுக்காரர் ஆட்சி செய்தனர். பிரெஞ்சுக்காரர் ஆட்சியில் புதுவை பல மாற்றங்களைக் கண்டது. சேரிகளில் கல்வி கற்பிக்கப் பள்ளிகளை இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கண்டது புதுவை மாநிலம். தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலைச் சட்டம், பெண்களுக்கெனத் தனிப்பள்ளிக் கூடம், முதியோர் கல்விக் கூடம், இலவச மதிய உணவுத் திட்டம் ஆகிய முற்போக்குத் திட்டங்கள் புதுவையில் சென்ற நூற்றாண்டின் இறுதியிலும், இந்நூற்றாண்டுத் தொடக்கத்திலும் தொடங்கப் பெற்றன.

    பெண்கள் தனிப்பள்ளிக் கூடம்

    முதியோர் கல்விக் கூடம்

    இலவச மதிய உணவுத் திட்டம்

    பிரெஞ்சுக்காரர்கள் கட்டிய பாலம்

    கலங்கரைவிளக்கம்
     

    'எல்லோர்க்கும் கல்வி' என்ற கொள்கையைப் பிரெஞ்சுப் புதுவை கடைப்பிடித்தது. சாதி மதவேறுபாடு இல்லாமல் கல்வி அளிக்கும் நடைமுறையினைப் புதுவை அரசியல் மேற்கொண்டது. ஜூல்ஸ் பெரி (Jules Fery) என்ற பிரெஞ்சுக் குடியரசுத் தலைவர், மதக்குருக்களின் வலிமைமிக்க பிடியிலிருந்து கல்வியை அரசின் பொறுப்புக்கு மாற்றினார். நம் கவிஞர் பாரதிதாசன்
     

    என்று குடியரசுத்தலைவரின் செயலை அன்று போற்றிப் பாடினார்.

    சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற பிரெஞ்சுக் கோட்பாடுகள் புதுவை அரசியலிலும் ஒளிவிட்டன.
     

    1.1.2 கவிஞரின் முன்னோர்
     

    இவ்வாறு அமைகிற நம் கவிஞர் குடிவழி. இவருடைய தாத்தா சுப்பராய முதலியார் பள்ளிக்கூடத்தான் முதலியார் என்று ஊராரால் அழைக்கப்பட்டவர். தந்தையார் கனகசபைக்கு மனைவியர் இருவர். முதல் மனைவிக்குத் தெய்வநாயகம் என்ற மகனும், இரண்டாம் மனைவிக்குக் கவிஞர் உள்ளிட்ட மூவரும் மக்களாவர். கவிஞருக்கு 25 வயதாகும் போது அவருடைய தந்தையாரும், பிறகு சில ஆண்டுகளில் தாயாரும் இறந்தனர்.

    கவிஞரின் தந்தையார் சோதிடக்கலை வல்லுநர். கவிஞரின் தமையனாரும் அக்கலையில் வல்லவராகத் திகழ்ந்தார். எனினும் கவிஞருக்கு அக்கலையில் நம்பிக்கை இல்லை. கவிஞரின் தந்தையார் செல்வராக வாழ்ந்து பின் ஏழையாக மாறியவர். கவிஞர் தம் மகன் மன்னர் மன்னனிடம் இவ்வாறு கூறுகிறார்:

    "முந்திரிப் பயிரை அரைத்துப் பிசைந்து அதிலே இடை
    யின்றி வாதுமைப் பருப்பு பதித்து, கொதிக்கும் பசு
    நெய்யில் வடைதட்டிப் போட்டுத் தின்று கொண்டிருந்
    தோம் நாங்கள். சரிவு ஏற்பட்ட பின்னர் பழைய
    சோறு சாப்பிடுவதற்கே திண்டாட்டம் ஆகிவிட்டது . . .
    ஒருகாலத்தில் செல்வத்துடன் விளங்கிய எந்தையார்
    யாரிடமும் கையேந்த விரும்பியதில்லை. வந்துவிட்ட
    துயரத்தைத் தாம் ஒருவராகவே ஏற்றுக் கொண்டார்.
    இந்த வறுமை இருள் அவரைப் பொறுத்தவரையில்
    இறுதிவரை விடியாமலே போய்விட்டது. விளைவுகள்? . . .
    வீடு ஏலத்தில் போய்விட்டது. எங்கள் குடும்பம் சிதறிச்
    சின்னா பின்னமாயிற்று. நாங்கள் நடுத்தெருவில்
    நின்றோம்"

    வணிகம் என்ற கப்பல் தரைதட்டி விட்ட சூழலில் கவிஞர் காலத்தில் குடும்பம் அத்தொழிலைக் கைக்கொள்ளவில்லை.
     

    1.1.3 கவிஞரின் இளமைப் பருவம்
     

    கவிஞருக்கு இளம் பருவத்திலேயே கவிதை படைக்கும் ஆற்றல் இருந்தது. அதனோடு முரட்டுத்தனமும், பிடிவாதமும் இருந்தன. கவிஞர் தம் தொடக்கக் கல்வியைத் திருப்புளிசாமி ஐயா என்ற புகழ்பெற்ற திண்ணைப்பள்ளி ஆசிரியரிடம் பயின்றார். திருப்புளிசாமி ஐயா கவிஞருக்கு எண்ணும் எழுத்தும் கற்றுக் கொடுத்ததோடு அமையவில்லை. ஆண்டாளின் திருப்பாவைப் பாடல்களை மார்கழி மாதத்தில் பக்தியோடு ஓதக் கற்பித்தார். பள்ளிக்கூட நாடகங்களை நடத்தி அவற்றில் கவிஞருக்குப் பங்களித்தார். 'ஆயுதபூஜை' போன்ற விழாக்களில் முழு ஈடுபாட்டோடு பாரதிதாசன் பங்கேற்றார். அக்காலத்தில் புதுவையில் ஒரு பிரெஞ்சுக் கல்லூரி இருந்தது. அதில் பிரெஞ்சுக்காரரும் அவரோடு உறவுகொண்ட ஏனையவரும் மட்டுமே சேர்க்கப்பட்டார்.

    திருப்புளிசாமி ஐயா

    புதுவையில் வாழ்ந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர். அவர்கள் ஆங்கிலமோ தமிழோ கற்க இயலாத நிலை அப்போது இருந்தது. இந்நிலையை அகற்ற முன்வந்தார் கலவை சுப்பராயச் செட்டியார் என்ற செல்வர். இவர் அளித்த பெருநிதியத்தால் எழுந்தது 'கல்வே கல்லூரி'. இக்கல்லூரி ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் ஆகிய மும்மொழிகளையும் கற்பித்தது. பாரதிதாசன் இக்கல்லூரி மாணவரானார்.
     


    கல்வே கல்லூரி
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:45:52(இந்திய நேரம்)