Primary tabs
-
1.6 தொகுப்புரை
எத்தனையோ கவிஞர்கள் இந்த நாட்டில் பிறந்தார்கள்! அவர்களில் பலர் கால வெள்ளத்தின் போக்கில் வசதியாய்க் கப்பல் ஓட்டினார்கள். புரட்சிக்கவிஞர் சமுதாயக் கடலில், கொந்தளிக்கும் எதிர்ப்பு அலைகளுக்கிடையே கவிதைக் கட்டுமரத்தை அஞ்சாது செலுத்திய ஆண்மையாளராகத் திகழ்ந்தார். கொள்கை வெறியும் செயல்திறனும் மிக்க அவர் பாடல்கள் தமிழரின் இதயச் சுவர்களில் என்றென்றும் ஒலிக்கும்!