Primary tabs
கவிஞருக்குப் பதினேழு வயதான போது பாரதியாருடன் சந்திப்பு ஏற்பட்டது. பாரதியாரின் பாடலை ஒரு திருமண வீட்டில் சுப்புரத்தினம் இசையோடு பாடினார்.
பாரதியாருடன் பாரதிதாசன்
அங்கு வந்திருந்த பாரதி, அதனைக் கேட்டார். சுப்புரத்தினம் பாடியமுறை சுப்பிரமணிய பாரதியைக் கவர்ந்தது. பதினெட்டாம் வயதில் பாரதியின் முன்னர் சுப்புரத்தினக் கவிஞர், அவர் வேண்டுகோளுக்கேற்ப,
என்று தொடங்கும் பாடலை எழுதிப் பாடினார். இந்தப் பாடலைப் பாரதியார் தம் கைப்படவே பெயர்த்து எழுதி "ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது'' என்ற குறிப்பையும் இணைத்துச் சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பி வைத்தார். பாரதியின் பழக்கம் சுப்புரத்தினத்தின் பழைய கவிதை நடையை மாற்றியது. 'பாரதிதாசன்' என்று புனைபெயர் வைத்துக் கொள்ளச் செய்தது.
"நான் பாரதிதாசன் என்று புனைபெயர் வைத்துக் கொண்டுள்ளேன். அதற்குக் காரணம், அப்போது அவர் என் உள்ளத்தில் முதலிடம் பெற்றிருந்ததுதான். சாதிக் கொள்கையை நன்றாக, உண்மையாக எதிர்த்தவர் பாரதியார்தாம்! அவருக்கு முன் பன்னூற்றாண்டுகளுக்கு முன் அவ்வாறு சாதிக் கொள்கையை எதிர்த்த வரை நான் கண்டதில்லை. பாரதி எதிர்த்துப் பணிபுரியத் தொடங்கிய பன்னாட்களுக்குப் பின்னரே பெரியார் இயக்கம் தோன்றியது. பாரதியாரை நான் ஆதரித்ததும் பாரதிதாசன் என்று நான் புனைபெயர் வைத்துக் கொண்டதும், ஏதாவது ஒரு கூட்டத்தாரிடம் நன்மையை எண்ணியன்று. சாதி ஒழிப்பு விளம்பரம் ஆதல் வேண்டும் என்பதற்காகவும் பாரதியாரைப் போல எளிய நடையில் மக்களுக்கு இன்றைக்கு வேண்டிய கருத்தை வைத்துப் பாடல் இயற்ற வேண்டும் என்பதைப் புலவர்க்கு நினைவூட்ட வேண்டும் என்பதற்காகவுமே"
என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூறுவது எண்ணத்தக்கது.
சுப்புரத்தினக் கவிஞருக்கு இயல்பாகவே நாட்டுப் பற்று மிகுதி. சைகோன் சின்னையா என்ற அவருடைய நண்பர் நடத்திய 'தேசசேவகன்' என்ற இதழில் அவர் பாரதநாட்டின் மேன்மை குறித்துப் பல பாடல்களை எழுதியுள்ளார்.
என்று பாடியுள்ளார். காந்தியடிகளைப் போற்றி அக்காலத்தில் பாடல் புனைந்துள்ளார். மதுவிலக்கை வற்புறுத்தும் வகையில் ''கள்ளை அகற்றுதல் தேசக்கலை'' என்று பாடியுள்ளார். காங்கிரஸ் இயக்கத்தைத் தெய்வமென்றே அவர் தம் பாட்டில் தொழுது போற்றுகின்றார்.
தம் மனைவி மக்களுடன்
கதர் இயக்கத்தில் மிக அழுத்தமான பற்றுக் கொண்டவர் கவிஞர். தாம் கதர் ஆடைகளை உடுத்தியோதோடு அல்லாமல், தம் மனைவி மக்களையும் கதர் உடுத்த வைத்தார். கதர்த்துணியைத் தம் தோளில் சுமந்து விற்றார். கைராட்டினத்தில் நூல் நூற்றலை அவர் ஊக்கப்படுத்தினார்.
என்று அவர் பாடுகிறார். காங்கிரசில் ஏற்பட்ட பிளவு, அதன் தலைவர்களிடையே இருந்த வருணாசிரம நம்பிக்கை, சாதிப்பாகுபாடு ஆகியவற்றின் காரணமாகக் கவிஞர் தேசிய நீரோடையை விட்டு விலக வேண்டியதாயிற்று. அந்நிலையில் கவிஞர் கதரையும் கைவிட்டார்.
பாரதிதாசன் பயன்படுத்திய பொருட்கள்காட்சி (78kb)
பாரதிதாசன் நாட்டுக்காகவும் மொழிக்காகவும் வாழ்ந்தவர். இந்தியா விடுதலை அடையக் கருதி அவர் பல பாடல்களை இசைத்தார். விடுதலை வீரர்கள் பலருக்குத் துணை செய்தார். திலகரின் உரிமைக் கிளர்ச்சியில் ஈடுபட்டுக் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட மாடசாமிக்கு இவர் உதவினார். பாரதியார், அரவிந்தர் ஆகியோருக்காக உதவச் சென்று பலமுறை செத்துப்பிழைத்தார். மக்கள் நலம் காக்க எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாதவர் கவிஞர்.
என்று பொதுவாழ்வில் தாம் சிறை புக நேர்ந்ததனையும் அவர் கூறக் காணலாம். இப்படி உழைத்ததால்தான் இவரை இதோ நாம் மெரினா கடற்கரையில் அவர்க்கே உரிய செம்மாந்த தோற்றத்தோடு சிலை வடிவில் காண்கின்றோம்!
மெரினா கடற்கரையில் பாரதிதாசனின் சிலை