Primary tabs
-
தன் மதிப்பீடு: விடைகள் - II
4. பாரதிதாசன் காலத்தில் நிலவிய மூடநம்பிக்கைகளைக் குறித்து எழுதுக.
பகுத்தறிவுக்குப் பொருந்தாத பல மூட நம்பிக்கைகள் பாரதிதாசன் காலத்தில் இருந்தன.
இந்த, இந்த நேரங்களில் தான் சிலவற்றைச் செய்ய வேண்டும். இந்த, இந்த நேரங்களில் சிலவற்றைச் செய்யக்கூடாது என்று மூடநம்பிக்கை கொண்டிருந்தனர். எனவே, இராகுகாலமும், யமகண்டமும் பணிகளை மேற்கொள்ளாததற்கு உரிய காலங்கள் என்று நம்பினர். பயணம் செய்யக்கூடாத நாட்களாக, சூலம், அட்டமி, நவமி போன்றவற்றைக் குறிப்பிட்டனர். வீட்டிற்குப் புதிதாகக் குடிபுகுவதற்குச் செல்ல விரும்பினாலும் ஆனி, பங்குனி மாதங்களில் குடிபுகக்கூடாது என்று கூறினர். பூனை குறுக்கே வந்தாலும், எண்ணெய் கொண்டு குறுக்கே வந்தாலும் போகும் காரியத்தில் வெற்றி கிடைக்காது என்று நம்பினார்கள். ஒருவர் இயற்கையாகவே தும்மினால், நினைத்த காரியம் கெட்டுவிடும் என்று எண்ணினர். மனிதரில் சிலரைத் தொட்டால் தீட்டு என்று குறிப்பிடுகிறார்கள். மனிதர் செய்யும் பாவத்திற்கும், புண்ணியத்திற்கும் ஏற்ப, நரகம் அல்லது சொர்க்கம் கிடைக்கும் என்று கருதினர். ஏழு பிறவிகள் இருப்பதாக நம்பினர். இத்தகைய மூட நம்பிக்கைகளை மக்கள் கொண்டிருந்தனர்.