தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 4.7 தொகுப்புரை
     

    அறிவுகொண்ட சமுதாயமாய் உலக மக்களைக் காண விரும்பியவர் பாரதிதாசன். இந்தச் சமுதாயத்தின் அறிவுக்குத் தடையாய்ச் சாதியும் மதமும் விளங்குவதைக் கண்டார் பாரதிதாசன். எனவே, அவற்றைத் தமது கவிதைகள் வழியாக விரட்டியடிக்க எண்ணிப் பாடியுள்ளார்.

    மதவாதிகள் மக்களின் உழைப்பையும் பணத்தையும் கடவுளைக்காட்டி, சுரண்டுவதைப் பாரதிதாசன் தமது கவிதைகளில் கண்டித்துள்ளார்.

    மக்கள் பகுத்தறிவை இழந்து வாழ்வதற்கு அடிப்படைக் காரணம் அவர்களின் மூடநம்பிக்கை ஆகும். இந்த மூடநம்பிக்கை மக்களை விட்டு ஓடுவதற்குப் பாரதிதாசன் பாடியுள்ளார்; நல்ல நம்பிக்கையை மக்கள் மனங்களில் விதைத்துள்ளார்.

    மக்கள் வாழ்க்கையின் பச்சை விளக்காக விளங்குவது பகுத்தறிவு. இந்தப் பகுத்தறிவின் துணையுடன் வாழ்வில் உயரலாம் என்று அவர் உணர்த்தியுள்ளார்.

    மனிதன் தனது மதிப்பை உணர்ந்து வாழவேண்டும் என்று பாரதிதாசன் சுயமரியாதைச் சிந்தனையைத் தூண்டியுள்ளார்.

    பகுத்தறிவாளர்கள் நிறைந்த சமுதாயம் பொதுவுடைமைச் சமுதாயமாய் மலரும் என்ற கருத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். பகுத்தறிவுக்குத் தடையாய் விளங்கும் கடவுள் நம்பிக்கையைத் தகர்க்கக் கருதிய பாரதிதாசன் கடவுள் இல்லை என்று பாடியுள்ளார்.

    தன் மதிப்பீடு: வினாக்கள் - II

    1. மதம் எவற்றை வளர்ப்பதாகப் பாரதிதாசன் கூறுகிறார்?
    1. எது மூடநம்பிக்கை?
    1. சுயமரியாதை என்றால் என்ன?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:51:31(இந்திய நேரம்)