Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
3. கிராமத்தில் வாழ்பவன் வரலாற்றாசிரியனாகத் திகழ்வதைக் காட்டுக.
போன தையிலே வந்த வெள்ளம், உடைப்பெடுத்த ஏரி, இன்னான் மகன் வீரன் ஏரி உடையாமல் ஊரைப் பாதுகாத்தது, கண்ணாத்தா விறகெடுக்கக் காட்டிற்குப் போன போது பாய்ந்து வந்த புலி, ஐயனார் கோயில் புற்றில் யார் கண்ணும் படாமல் இருக்கும் அஞ்சுதலை நாகம் பற்றியெல்லாம் கிராமத்தானே கூறமுடியும்.
