தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Purananooru-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    1. மோசிகீரனார் பாடிய புறப்பாட்டின் திரண்ட கருத்தைத் தருக.

    வீர முரசத்தை நீராட்டி வரச் சென்றிருந்தனர். அம்முரசம் வைக்கும் கட்டில் எண்ணெயின் நுரையை முகந்து வைத்தாற் போன்ற மெல்லிய பூவால் நிரம்பியிருந்தது. அக்கட்டிலை முரசு கட்டில் என அறியாது நான் ஏறிக் கிடந்தேன். என்னை உன் சினந்தோன்ற உன் வாளால் இருகூறாக ஆக்காது விட்டாய்; நல்ல தமிழ் முழுதும் அறிந்த உன் பண்புக்கு அவ்வாறு செய்யாது விட்டது பொருந்தும். அவ்வாறு இருகூறாக என்னை வெட்டாமல் விட்டதுடன், என் அருகில் வந்து வலிமை மிக்க முழவு போன்ற உன் தோளை உயர்த்தி விசிறி கொண்டு வீசினாய். வெற்றி பொருந்திய தலைவனே! நீ இவ்வாறு செய்தமைக்குக் காரணம், இவ்வுலகத்தில் நல்ல புகழைப் பெற்றவர்களுக்கே மேலுலகமாகிய உயர்ந்த இடத்தின் கண் வாழ இடம் கிடைக்குமென்றும் மற்றவர்கள் அவ்வுலகில் உறைதல் இயலாது என்பதும் நீ அறிந்த செயல் போலும்!

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:37:53(இந்திய நேரம்)