Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
6. புறநானூற்றின் பத்தாம் பாட்டில் ஊன்பொதி பசுங்குடையார் சோழனுக்குக் கூறும் அறிவுரைகள் யாவை?
உன்னை வணங்கி வாழுபவர்களை நீ விரைந்து அறிந்து கொள்ள வேண்டும். பிறரைக் குற்றம் சொல்பவர்களின் சொற்களை நீ ஆராய்ந்து தெளிய வேண்டும். நீயே பிறரிடத்து உண்மையாகத் தீமை உள்ளது எனக் கண்டால், அதனைக் குறித்து மனத்தில் ஆராய்ந்து, அக்குற்றத்திற்குத் தகுந்த தண்டனையை வழங்க வேண்டும். தவறு செய்வோர் உன் பாதங்களை அடைந்து உன் முன்னே நிற்பாரானால், பிழை செய்யாதவர்க்கு நீ அருள்வதை விட மிகுதியும் அருள் செய்ய வேண்டும்.