Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
3. அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின் என்ற பாட்டின் திணை, துறையை விளக்குக.
இப்பாட்டின் திணை பொதுவியல். முன்பு மகிழ்ச்சியாக வாழ்ந்த நிலை, பின்பு தோன்றிய அவலம் எனத் தம் வாழ்வியலை உரைக்கும் இப்பாட்டு ஏழு திணைகளிலும் காணாத பொதுச் செய்தியை உரைப்பதால் இது பொதுவியலாயிற்று. மாந்தர் அனைவர் வாழ்விலும் ஏற்ற இறக்கங்கள் பொதுவாக நிகழக் கூடியன ஆதலாலும் பொதுவியல் திணை சார்ந்தது எனலாம். இப்பாட்டின் துறை கையறு நிலை. தம்மைச் சேர்ந்தோர் மாய்ந்த நிலையில் மனம் வெதும்பிப் புலம்புவது கையறு நிலையாகும். பாரி இறந்தபின் தமக்குற்ற அவலத்தை (துன்பத்தை) அம்மகளிர் கூறியதால் கையறுநிலை ஆயிற்று இப்பாட்டு.