தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Purananooru-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    2. உலகம் நிலை பெற்றிருப்பதற்குரிய காரணம் யாது?

    தமிழர் தம் வாழ்வில் பெறுவதற்கு அரிய பேறாகக் கருதியது புகழை. புகழ் வருமெனின் உயிரையும் கொடுத்துவிடுவர் என்று கூறுகிறது இப்பாட்டு. அவர்கள் தம் உணவைப் பிறரோடு பகிர்ந்துண்பர்; யாரையும் வெறுக்க மாட்டார்; சோம்பல் அற்றவர்; பழிக்கு அஞ்சுவர்; பழியோடு வரும் செல்வத்தை விரும்பார்; தமக்கென வாழார். இத்தகைய தன்மைகளை உடையவர் இருப்பதால்தான் இவ்வுலகம் இன்றும் இருக்கிறது என்கிறார் பாண்டிய வேந்தர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:40:31(இந்திய நேரம்)