தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Purananooru-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    3. கல்வியின் சிறப்பைப் பாண்டியன் அறிவுடை நம்பி கூறுமாறு வரைக.

    “தன் ஆசிரியர்க்கு ஒரு துன்பம் வந்த காலத்தில் அதைத் தீர்க்க உதவி செய்தல், மிகுந்த பொருளைக் கொடுத்தல், வழிபடும் நிலையிலிருந்து மாறாமல் கற்றல் ஆகிய நற்செயல்கள் அனைத்தும் செய்து ஒருவன் கல்வியைப் பெற வேண்டும். ஏனெனில், தாய் ஒருத்தி தன் வயிற்றில் வேறுபாடில்லாமல் பி்றந்த பல பிள்ளைகளில் கல்விச் சிறப்புடைய காரணத்தால் ஒன்றை நோக்கி மனம் வேறுபடக் கூடும். ஒரு குடியில் பிறந்த பலருள்ளே மூத்தோனை வருக என்று அழையாமல், அவர்களுக்குள்ளே அறிவுடையோன் சென்ற வழியில் அரசனும் செல்வான். வேறுபாடு சொல்லப்படும் நான்கு குலங்களுக்குள்ளும், கீழ்க் குலத்தான் எனப்படுபவன் ஒருவன் கல்வி கற்றுச் சிறந்திருந்தால் மேற்குலத்தானும் அவனிடம் சென்று வழிபடுவான்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:40:38(இந்திய நேரம்)