Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
3. தசும்பு துளங்கிருக்கை என்பதை விளக்குக.
கள் நிரம்பிய மிகப்பெரிய குடங்கள் உருண்டு விடாதபடி அவற்றை ஓர் இருக்கையில் வைப்பார்கள். வீரர்கள் மீண்டும் மீண்டும் குடங்களிலிருந்து முகந்து கள்ளை உண்பார்கள். அதனால் கள் உண்டவர்கள் மயக்கத்தால் ஆடுவது போலவே கள் கொண்ட குடங்களும் ஆடும். இந்த இருக்கை கள் குடத்தின் ஆடல் மேடை போல் தோன்றும். அதுவும் சேர்ந்து ஆடும். வெற்றிக் களிப்பில் வீரர் அனைவரும் கூத்தாடும் போது; குடமும், இருக்கையும் ஆகிய உயிர் இல்லாத அஃறிணைப் பொருள்கள் கூட மகிழ்ந்து ஆடும் என்னும் அழகிய நயம் தோன்ற இத்தொடர் அமைந்துள்ளது. இந்தக் கற்பனையைக் கொண்ட அழகிய இத்தொடர் பாடலில் உள்ளதால் அதுவே, பாடலின் பெயர் ஆகச் சூட்டப்பட்டுள்ளது.