Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
4. ஏறா ஏணி என்ற பாட்டில்சேரன் கொடைச் சிறப்பு எங்ஙனம் கூறப் பெறுகின்றது?
முழங்கும் மேகம் இடித்து மழையை மிகுதியும் பெய்தது போல, நீ உன்னை அடைந்த வறியவர்களுக்கு வாரி வழங்குவாய். அவர்களை உண்ணச் செய்து நீயும் உடன் உண்பாய். பாணர் கூத்தர் முதலானோர் மகிழ்ச்சி பெறப் பொன் நகைகளை அளவில்லாமல் கொடுப்பாய்.
விறலியர்க்குப் பல பெண் யானைகளைப் பரிசாகத் தருவாய். துய்யினை உடைய வாகைப் பூவை மேலே வைத்து, நுண்ணிய கொடியில் பூத்த உழிஞைப் பூவைச் சூடுகின்ற வெற்றி வீரர்கள் பெற்று மகிழ, கொல்லும் தொழிலையுடைய ஆண்யானைகளைப் பரிசிலாக அளிப்பாய். உன் குலத்தைப் புகழ்ந்து வெற்றியை வாழ்த்திப் பாடும் பாணன் பெறுமாறு குதிரைகளைத் தருவாய்.