Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
2. வெருவரு புனல்தார் என்ற பாட்டு செங்குட்டுவனின் வீரத்தை எங்ஙனம் மொழிகின்றது?
போர்ப்பறையோடு முரசொலி கலந்து வெள்ளத்தின் ஓசையாய் முழங்க, அதனைக் கேட்டு அஞ்சிப் பணிகின்ற அரசர்களுக்குக் காவலாகவும், எதிர்த்தவரை அழிக்கும் பெரும் வெள்ளமாகவும் உன் காலாட்படை பாய்ந்து செல்லும். படையாகிய அந்த வெள்ளம் கடலிலும் மலையிலும் பிற இடத்திலும் உள்ள பகைவர் அரண்களை அழித்து, அவர் நாட்டின் நிலப்பரப்பு முழுவதிலும் பாய்ந்து பரவி நிரம்பிவிடும். பகைவரின் புகழ் கெடும். அவர்களின் சினம் என்னும் தீயை அவித்துவிடும். இத்தகைய காலாட்படைக்குத் தலைவன் என்று செங்குட்டுவனின் வீரத்தைப் புகழ்கிறது.