Primary tabs
- தன் மதிப்பீடு:விடைகள்-II1.வன்புறை என்றால் என்ன? அதன் இரு பிரிவுகள்
யாவை?இது களவியலுக்குரிய கிளவித் தொகைகளுள் ஒன்று. (வன்பு - வலிமை; உறை - உறுத்தல்) வற்புறுத்திக் கூறுதல். தலைவி ஐயுற்றவழித் தலைவன் அவளது ஐயம் தீர உண்மையை வற்புறுத்திக் கூறுதல் வன்புறை எனப்படும். வன்புறை இருவகைப்படும். அவையாவன:
(1) ஐயம் தீர்த்தல்
(2) பிரிவு அறிவுறுத்தல்