Primary tabs
- தன் மதிப்பீடு:விடைகள்-II2.பிரிவுழி மகிழ்ச்சி என்னும் கிளவியை விளக்குக.
பிரிவுழி மகிழ்ச்சி என்பது களவிற்குரிய கிளவித் தொகைகளுள் ஒன்று. தலைவனும் தலைவியும் ஓரிடத்தில் களவு வழியில் மகிழ்ந்தனர். அப்புணர்ச்சிக்குப்பின் அங்கிருந்து தலைவி பிரிந்து செல்ல, அப்போது தலைவியோடு கூடிய கூட்டத்தை எண்ணி, தலைவன் மனமகிழ்வுடன் பேசுவது பிரிவுழி மகிழ்ச்சி எனப்படும். பிரிவுழி மகிழ்ச்சி இருநிலைகளை உடையது. அவையாவன
- செல்லும் கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லல்.
- செல்லும் கிழத்தி செலவுகண்டு பாகனொடு சொல்லல்.
செல்லும் கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லல்
கூடிப்பிரிந்து செல்லும் தலைவியின் தன்மைகண்டு தலைவன் தன் மனத்தொடு பேசி மகிழ்வது.
செல்லும் கிழத்தி செலவுகண்டு பாகனொடு சொல்லல்
கூடிப்பிரிந்து செல்லும் தலைவியின் தன்மை கண்டு தலைவன் தன் பாகனிடம் பேசி மகிழ்வது.
- செல்லும் கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லல்.