Primary tabs
- தன் மதிப்பீடு:விடைகள்-II3.இடந்தலைப்பாடு என்றால் என்ன? அது எத்தனை வகைப்படும்?
இடந்தலைப்பாடு என்பது களவிற்குரிய கிளவி்களுள் ஒன்று. இடம் முதன்முதலாகக் கூடிய இடம். தலைப்பாடு - மீண்டும் அவ்விடத்தே வந்து கூடுதல்.
முதன் முதலாக இயற்கைப்புணர்ச்சியில் கூடி மகிழ்ந்த தலைவன் (மீண்டும்) அடுத்த நாளும் அவ்விடத்தே வந்து தலைவியைக் கூடுதல் இடந்தலைப்பாடு எனப்படும்.
இடந்தலைப்பாடு மூன்று வகைப்படும். அவையாவன: (1) தெய்வம் தெளிதல் (2) கூடல் (3) விடுத்தல்
தெய்வம் தெளிதல்: முன்னே முதல்முறையாகத் தலைவியை நம்மோடு கூட்டி வைத்த தெய்வம் மறுபடியும் அதே இடத்தில் தலைவியை நம்மோடு சேர்த்து வைக்கும் என்று தெளிவுடன் உரைப்பது.
கூடல் : அவ்வாறே கூடி மகிழ்தல்.
விடுத்தல்: கூடி மகிழ்ந்த பிறகு தலைவியை அவளது தோழியர் கூட்டத்தின்பால் செல்லுமாறு அனுப்பி வைத்தல்.