Primary tabs
- தன் மதிப்பீடு:விடைகள்-II5.கீழே தந்துள்ளவைகளுக்கு வரையறை தருக.
- தெளிவு
- மருளுற்று உரைத்தல்
- எதிர்மறை
- பாங்கிற் கூட்டல்
-
தெளிவு : தலைவன் தனது நிலைப்பாட்டை வற்புறுத்தி
உரைப்பது வன்புறை எனப்படும். அந்த வன்புறை
வார்த்தைகளை ஏற்றுத் தலைவன் சொல்வது
உண்மையானதுதான்; ஏற்புடையதுதான்’ என்று
தெளிந்து தலைவி ஆற்றியிருப்பது தெளிவு எனப்படும்.
“தலைவன் மாற்றம் தலைவி தேற்றம் தெளிவாம்
என்பர்” (களவியல் 14) என்பது இலக்கண நூற்பா.-
மருளுற்று உரைத்தல்: தலைவி பிரிந்து சென்றபோது
தலைவன் மனம் கலங்கிப் பேசுவது பிரிவுழிக் கலங்கல்
எனப்படும். அதன் ஒரு பிரிவே மருளுற்று உரைத்தல்
ஆகும். மருளுற்று உரைத்தல் என்றால் மயக்கம்
கொண்டு பேசுதல் என்று பொருள்.
-
எதிர்மறை : தலைவனது காதலைக் (களவை)
கேட்டறிந்த பாங்கன ‘நினக்கு இது தக்கது அன்று’
என்று தலைவனிடம் இடித்துரைப்பது எதிர்மறை
எனப்படும்.
-
பாங்கன் வாயிலாகத் தலைவியைக் கூடி மகிழ்ந்த
தலைவன் ‘இனி நீ வரும்போது நின்
உயிர்த்தோழியோடு வருக!' என்று கூறி, தலைவியை
அவளது தோழி இருக்கும் இடத்திற்கு அனுப்பி
வைத்தல் பாங்கிற் கூட்டல் எனப்படும்.
- தெளிவு