தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 6.7 தொகுப்புரை

    மாணவர்களே!

    யாப்பிலக்கணத்தின் இறுதிப் பாடமாகிய இப்பாடத்தில் எதுகை, மோனை ஆகிய தொடைகள் பற்றி உறுப்பியலில் சொல்லப்பட்ட கருத்துகளுக்குப் புறனடையான இலக்கணங்களை அறிந்து கொண்டீர்கள். செய்யுளியலில் சொல்லாது விடுபட்ட தரவு, தாழிசை, அடி வரையறைகளை இப்பாடத்தில் தெரிந்து கொண்டீர்கள். முதலிரண்டு இயல்களிலும் சொல்லப்படாத, முற்றிலும் புதிய கூன், வகையுளி போன்ற சில இலக்கணக் கூறுகளை விளக்கமாக அறிந்து கொண்டீர்கள். இவற்றுள் சில, செய்யுளின் வடிவம் பற்றியவை. சில, பொருள் பற்றியவை என வேறுபடுத்தி அறிந்து கொண்டீர்கள்.

    நூலாசிரியர் சொல்லாத வண்ணம் போன்ற இலக்கணங்களையும் தெரிந்து கொண்டீர்கள். இவ்வாறு யாப்பிலக்கணத்தை முறையாகவும் முழுமையாகவும் கற்றதன் பயனாக, நீங்கள் படிக்கும் இலக்கியங்களில் ஓசை நுட்பத்துடன் பொருள் நுட்பம் இணைந்து வரும் கவிதை அழகைச் சுவைத்துணர முடியும். மேலும், படைப்புத் தூண்டுதல் உள்ளோர் இந்த யாப்பை ஒட்டியும், மீறியும் கவிதைகளைப் படைக்கவும் முடியும்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - Il
    1.
    தாழிசைகளின் அடிச்சிறுமை ; பெருமை குறிப்பிடுக.
    2.
    வஞ்சிப்பாவில் கூன் எவ்வாறு வரும்?
    3.
    'திருத்தார்நன் றென்றேன் தியேன்' - இது எவ்வகை விகாரம்?
    4.
    வகையுளி என்றால் என்ன?
    5.
    வாழ்த்து எத்தனை வகைப்படும்?
    6.
    தொன்மை எனும் வனப்பை விளக்குக.
    7.
    அடிமறி மொழி மாற்றுப் பொருள்கோள் என்றால் என்ன?
    8.
    செய்யுளில் குறிப்பிசையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2017 12:46:49(இந்திய நேரம்)