Primary tabs
-
4.8 தொகுப்புரை
சோழர் காலம் ஆலயப் பண்பாட்டின் பொற்காலம்; எனவே, கோயில்கள் பலவும் இணைக்கப்படும் நோக்கில் பரிவாரத் தலங்களாக, ஒரு நாயகத் தன்மையுடையன வாயின.
சோழர்களும் அவர்கள் தேவியர்களும் புரிந்த கோயிற் பணிகள் பற்றித் தெரிந்து கொள்ளும் வகையில் தஞ்சைப் பெரிய கோயில், திருவையாற்றுக் கோயில் முதலியவை கூறப்பட்டன. மேலும், தென் கயிலாயத்திற்குச் சிறப்பளிக்கும் வகையில் ஏழூர்த்தலங்கள் இயைபுடன் சொல்லப்பட்டன. பூலோக கைலாயமாகச் சிதம்பரம் போற்றப்படுதலின் அதன் கட்டடக் கலைப் பெருமை சுருக்கமாகத் தரப்பட்டது. சக்தியின் பெருமை நோக்கில் சிவகாமியம்மன் கோயிலும் உள்ளது. இராமேசுவரம், பழநி, திருவில்லிபுத்தூர், திருவரங்கம் ஆகிய திருத்தலங்கள் மக்கள் பலரின் நாட்டத்தைக் கவரும் வகையில் கட்டடங்களும் வனப்புடன் அமைந்துள்ளன என்பது சான்றுகளுடன் தெளிவாக்கப்பட்டன.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II