Primary tabs
கருத்தையோ உணர்வையோ வெளிப்படுத்த அபிநயம் உதவும். அபிநயத்தின் மூலம் ஒரு செய்தியை மற்றவர்களுக்கு உணர்த்தலாம். பரத நாட்டியத்தில் நான்கு விதமான அபிநயங்கள் பயன்படும். அவை ஆகார்ய அபிநயம், வாசிக அபிநயம், ஆங்கிக அபிநயம் மற்றும் சாத்விக அபிநயம் என்பனவாகும். இந்த அபிநயவகைகளைப் பற்றி இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.
அலங்காரம் மூலம் அபிநயித்தல் ஆகார்ய அபிநயம் எனப்படும். முக ஒப்பனை, உடை, அணி அலங்காரம், மேடை அமைப்பு முதலியவை பரத நாட்டியத்தில் முக்கிய இடம் பெறும். எடுத்துக்காட்டாகச் சிவனாக ஒருவர் ஆட வேண்டுமென்றால் அவர், சடாமுடி, பிறைச்சந்திரன், பாம்பு,புலித்தோல், நெற்றியில் திருநீறு முதலான ஒப்பனைகளைச்செய்து கொள்ள வேண்டும். இந்த ஒப்பனைகள் அவரைச்சிவனாக உணர்த்தும். இவ்வாறு அபிநயம் செய்வது ஆகார்ய அபிநயம் எனப்படும்.
4.3.2 வாசிக அபிநயம்இந்த அபிநயத்திற்குப் பாடல் முக்கியம். பாடற் பொருள் அபிநயிக்கப்படும். ஆடுபவரே பாடலைப் பாடி அபிநயிப்பார். பிறர் பாடவும் அபிநயிப்பார். தஞ்சாவூர் பாலசரஸ்வதி, கும்பகோணம் பானுமதி, மயிலாப்பூர் கௌரியம்மாள் ஆகியோர் தாமே பாடலைப் பாடி அபிநயம் செய்வர். தற்காலத்தில் வேறொருவர் பக்க இசை பாட ஆடுபவர் அதற்கேற்ப அபிநயம் செய்து ஆடும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.
தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நாட்டியப் பாடல்கள் உள்ளன. இவை செவ்விசையாகிய (classical music) கருநாடக இசையில் அமையும்.
4.3.3 ஆங்கிக அபிநயம்உடல் உறுப்புகளால் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துவது ஆங்கிக அபிநயம். உடல்உறுப்புகளுக்குத் தனித்தனிச் செய்கைகள் உண்டு.இவற்றில் கை முத்திரை சிறப்பிடம் பெறும், கைமுத்திரை என்பது விரல்களின் செய்கைகளாகும். பரத நாட்டியத்தில்ஒற்றைக்கை முத்திரைகளும் இரட்டைக் கை முத்திரைகளும் உண்டு. தமிழிலும் சமஸ்கிருதத்திலும் இவற்றிற்கு வழங்கும் பெயரைக் கீழே காணலாம்.
ஒற்றைக்கை முத்திரைஇரட்டைக்கை முத்திரைதமிழ் . . .பிண்டிபிணையல்சமஸ்கிருதம் ..அசம்யுதஹஸ்தம்சம்யுதஹஸ்தம்(அசம்யுத = சேராத, பிரிந்திருக்கின்ற,சம்யுத = சேர்ந்த,பிணைந்த)
பரத நாட்டியத்தில் பாடலின் பொருளைக் கைமுத்திரைகள் காட்டும். கை முத்திரைகள் வழி கண் செல்லும். கண்கள் செல்லும் வழி மனம் செல்லும். மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும்.
‘அபிநயதர்ப்பணம்’ என்னும் நூலில் நந்திகேஸ்வரர் இந்த அபிநயம் பற்றிக் கீழ்வரும் பாடலில் குறிப்பிடுகிறார்.
யதோ ஹஸ்தஸ், ததோத்ருஷ்டி
யதோ த்ருஷ்டிஸ், ததோ மன
யதோ மனஸ், ததோ பாவோ
யதோ பாவ ஸ்ததோ ரஸ(அபிநயதர்ப்பணம்) கம்பராமாயணத்தில் மிதிலைக் காட்சிப் படலத்தில் இதோ! கம்பரும் இதைத் தான் சொல்கிறார். பார்க்கலாமா?"கைவழி நயனஞ் செல்லக்
கண்வழி மனமும் செல்ல"
மனம் வழி பாவமும்
பாவ வழி ரசமும் சேர.(பாடல் எண் : 572)
பரத நாட்டியத்தில் கைமுத்திரைகள் முதன்மையாகக் கொள்ளப்படும்.
உள்ளத்தில் உணர்ச்சிகள் எழும், உணர்ச்சிகளால் உடலில் மாற்றங்கள் உண்டாகும். எடுத்துக்காட்டாகப் பயம் ஏற்படுகிறது. அப்பொழுது உடல் வியர்க்கும்; உடல் நடுங்கும்; கண்கள் சொருகும். இத்தகு மெய்ப்பாடுகளைஆடலில் காட்டுதல் சாத்விக அபிநயமாகும்.
சுவை உணர்வுகள் ஒன்பது. இதை நவரசம் என்று சொல்வர். ஒன்பான் சுவை என்றும் சொல்வர். அவையாவன: பயம், வீரம், இழிப்பு, அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், நடுநிலை ஆகும். இச்சுவைகளை மெய்ப்பாடுகளால் உணர்த்த வேண்டும். அதாவது கண்கள், உடலசைவு, உடல்நிலை (posture). கை முத்திரைகள், முக பாவம் ஆகியவற்றால் அபிநயித்தல். இது சாத்விக அபிநயமாகும்.
பரத நாட்டியம், அபிநயம் பற்றி இதுவரை படித்த செய்திகளைக் கீழ்வரும் வரைபடங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. எளிதில் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள இந்த வரைபடங்கள் பயன்படும். நீங்கள் ஒருமுறை கவனத்துடன் பார்த்தால் அவற்றின் பயனை நன்கு அறிந்து கொள்ளலாம்.
பரத நாட்டியம்
கருத்து வெளிப்பாடு இன்றி மகிழ்ச்சிச் சுவை ஒன்றையே வெளிப்படுத்தும்கருத்துகளும், உள்ளத்து உணர்வுகளும் வெளிக்காட்டும்கதையைத் தழுவிவரும் ஆடல் முறை‘அடவு’களுக்குச் சிறப்பிடம்பாடலுக்குச் சிறப்பிடம்கதைக்குச் சிறப்பிடம்உடல் அலங்காரம் மூலம் அபிநயித்தல்பாடற் பொருளுக்
போல அபிநயித்தல்உடல் உறுப்புகளால் அபிநயம் செய்து காண்பித்தல்உடல் மெய்ப் பாடுகளால் அபிநயித்தல்(ஆகார்யம் =உடல் தோற்றம்)(வாசிக = உச்சரிக்கப் படுகின்ற சொற்கள்)(ஆங்கிக= அங்கங்களுக்கு, உடல் உறுப்புகளுக்கு, உரிய)
1.பரத - என்ற சொல் என்ன பொருளைத் தருகிறது2.‘கூத்தர்’ என்போரின் பெண்பாலார் எவ்வாறு அழைக்கப்படுவர்?3.மாதவி எத்தனை ஆடல்களை அரங்கில் ஆடினாள்?4.நானூறு ஆடல் மகளிர் எந்தக் கோயிலில் ஆடல் தொண்டு செய்தனர்?5.தஞ்சை நால்வர் பெயரை எழுதுக.6.மூன்று ஆடல் முறைகள் யாவை?7.நான்கு வித அபிநயங்களை எழுதுக.