Primary tabs
பரத நாட்டிய நிகழ்ச்சியில் தனிப்பட்ட நாட்டிய உருப்படிகள் (items) உண்டு. ஒவ்வொரு உருப்படிக்கும் பெயர் உண்டு. தனித் தன்மை உண்டு. உருப்படிகளும் ஓர் ஒழுங்கு நிரலில் இருக்கும்.
முதலில் நிருத்த வகை உருப்படிகள், அதன் பின் நிருத்திய, நாட்டிய வகை உருப்படிகள் தொடரும். இந்த உருப்படிகள் பின்வருமாறு; அலாரிப்பு, ஜதிசுரம், சப்தம், வர்ணம், பதம், தில்லானா, விருத்தம், மங்களம்.
பரத நாட்டிய நிகழ்ச்சி ஆரம்பிக்குமுன் இறை வணக்கம் பாடுவது வழக்கம். பக்க இசையாளர் இதைப் பாடுவர்.
இனி, ஒவ்வொரு நாட்டிய உருப்படி பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
பரத நாட்டிய நிகழ்ச்சியின் முதல் நடனம் அலாரிப்பு. கடவுள், குரு சபையோர் முதலானோரை ஆடுபவர் மதித்து வணங்கும் நிகழ்ச்சி. நிருத்த வகையான ஆடல் இது.
அடவுகள் இந்த ஆடலில் முதன்மை பெறும். அடவுகளுக்கான சொற்கட்டுகள், "தத்தை தையும் தத்தாம் கிடதக" என்றவாறு அமையும். திச்ரம் (மூன்று) கண்டம் (ஐந்து), மிச்ரம்(ஏழு) ஆகிய தாள வகைகள் அலாரிப்பில் இடம் பெறும்.
அடவுச் சொற்கட்டுகளை நட்டுவனார் தத்தகாரத்தில் சொல்வார். பக்க இசையாளர் கம்பீர நாட்டை இராகத்தில் கோவையாக இசைப்பார். அடவுக் கோவைகள் முதற் காலம், இரண்டாம் காலம் என்று ஆடித் தீர்மானத்துடன் முடியும். இதை ஒரு எடுத்துக்காட்டினால் தெரிந்து கொள்ளலாம்.
இதோ! இது திச்ர (மூன்று) ஏக தாள அலாரிப்பு
(முதற்காலம்)
தா தெய் தெய் // தத் தா கிட தக //
(இரண்டாம் காலம்)
தாம் தித்தா ............ தெய்த் தத் தெய்
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
(கடைசித் தீர்மானம்)தாகத ஜம் தரிதா // ஜம் தரி ஜக தரிதா //
ததிங்கிண தொம் தக ததிங்கிண // தொம் தகதிகு
ததிங்கிணதொம்
தா . . . . . . . . . . . . . . . . . // திகு தக திகு தக திகு
தக //
திகுதக திகுதக திகுதக // தளங்கு தக ததிங்கிணதொம் //இதுவும் அபிநயம் இல்லாத நிருத்த வகை ஆடல் உருப்படியாகும். சொற்கட்டுகள் இடம் பெறாது. ஆனால் சுரக் கோர்வைகளும் ஜதிக்கோர்வைகளும் இருக்கும். அதனால் இதன் பெயர் ஜதி + சுரம் = ஜதிசுரம் ஆகிறது.பல்லவியை அடுத்து மூன்று சரணங்கள் இருக்கும். "சா நி தா மா கா" என்றவாறு முழுவதும் சுரக் கோர்வைகளைக் கொண்டிருக்கும். பல்லவிக்குப் பின் ஜதிகள் இருக்கும். ஒவ்வொரு சரணம் முடிந்து பல்லவி பாடிய பின்னும் ஜதிகள் இருக்கும்.
ஜதிசுரம் மிக விறுவிறுப்பான ஆடல் உருப்படி, கல்யாணி, கமாசு, சாவேரி மோகனம், ஹம்ஸானந்தி, சரஸ்வதி ஆகிய இராகங்களில் அமைந்த ஜதிசுரங்கள் இன்று பிரபலமாக உள்ளன. ஜதிசுரங்கள் பொதுவாக ரூபகம், ஆதி, திச்ர, திருபுடை, மிச்ர சாபு ஆகிய தாளங்களில் இருக்கும்.
குரலிசையோடு நட்டுவனார் தாளமும் மிருதங்க வாசிப்பும் இந்நிகழ்ச்சியில் சிறப்பிடம் பெறும்.
ஓரிரு ஜதிசுரங்களின் விவரங்களை இங்குப் பார்க்கலாம்.
தொடக்கம்இராகம்தாளம்இயற்றிவர்ச்ா;; நீதாபா.கல்யாணி...திச்ர ரகம்தஞ்சாவூர்பொன்னையா
ச்ா; ச்நிதபாகீரவாணி..மிச்ர சாபு ...கே.என்.தண்டாயுத பாணிப்பிள்ளை
நாட்டிய நிரலில் பாட்டும் பாவமும் தோன்றும் முதல் உருப்படி சப்தம். இது பாட்டு, சொற்கட்டு, ஜதிக்கோவை ஆகியவை கொண்டது. சப்தங்கள் தெலுங்கு மொழியில் இருக்கும்.தமிழிலும் சில சப்தங்கள் உண்டு. பெரும்பாலான சப்தங்கள் காம்போதி இராகத்திலும் மிச்ர சாபு தாளத்திலும் இருக்கும்.
பிரபலமான ஓரிரு சப்தங்களின் விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பாடல்இராகம்தாளம்இயற்றியவர்ஸரஸி ஜாட்சுலுகாம்போதி ....மிச்ரசாபுதஞ்சாவூர் வடிவேலுகோகுலாம் புதிகாம்போதி ....மிச்ரசாபுதஞ்சாவூர் சின்னையாவர்ணம் என்னும் உருப்படியில் இரண்டு வகை உண்டு. ஒன்று தாள வர்ணம், மற்றையது பதவர்ணம், பரத நாட்டிய நிகழ்ச்சியில் பதவர்ணம் இடம்பெறும். பல்லவி, அனுபல்லவி, முக்தாயிசுரம், எத்துக்கடை பல்லவி, சரணம் என்ற பகுதிகளைக் கொண்டது பதவர்ணம், இவ்வெல்லாப் பகுதிகளிலும் பாடல் தொடர்ந்து வரும். இப்பாடல் அபிநயிக்கத்தக்க பொருளைக் கருவாகக் கொண்டிருக்கும். ஆக, பதவர்ணத்தின் சுரங்களுக்கு நிருத்தமும் பாடலுக்கு அபிநயமும் செய்யப்படும். இதனால் இசை, தாளம், பாவகம் ஆகிய மூன்றும் சிறந்திருக்கும் உருப்படியாகப் பதவர்ணம் இருக்கும்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பதவர்ணங்கள் இயற்றப்பட்டுள்ளன. பல்வேறு இராகங்களில் இவை அமையும். ஆதி, ரூபக தாளங்களில் இருக்கும்.
பதவர்ணத்தின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு இராகத்தில் அமையும் இராகமாலிகைப் பதவர்ணங்களும் உண்டு.
இங்குச் சில எடுத்துக்காட்டுகளின் விவரங்களைக் காணலாம்.
முழுவதும் அபிநயமாக அமையும் உருப்படி பதம். இது பல்லவி, அநுபல்லவி,சரணம் என்ற பகுதிகளைக் கொண்டது. இது காதல் சுவையை உணர்த்தும் உருப்படி, ஆதலால் தலைவன் தலைவி உறவு முறையில் இறைவன் தலைவன். நாட்டியமாடுபவள் தலைவி. இது பரமாத்மா ஆகிய இறைவனை அடைய விரும்பும் ஜீவாத்மாவின் உறவை உணர்த்தும். இந்த உயர்ந்த உறவு, உலகியல் நிலையில் ‘பதத்தில்’ சித்தரிக்கப்படுகிறது.
தலைவி அனுபவிக்கும் பல்வேறு அந்தரங்க உணர்வுகள் இந்த உருப்படியில் அபிநயிக்கப்படும் ஆதலால் உசேனி, கமாசு, ஆகிரி, கானடா போன்ற மென்மையான இராகங்களில் பதங்கள் அமைவது வழக்கம். தாள வேறுபாடுகள் முக்கியத்துவம் பெறுவதில்லை.
வெவ்வேறு வகையினரான தலைவியரின் தன்மைக்கு ஏற்ப அபிநயபாவகம் இருக்கும்.
முருகன், சிவன், கிருஷ்ணன், ஆகிய தெய்வங்கள் இந்த உருப்படியில் தலைவனாகக் கொள்ளப்படுவர். மன்னர், வள்ளல் ஆகியோரைத் தலைவனாகக் கொண்ட பதங்களும் உள்ளன.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வடமொழி ஆகிய மொழிகளில் பதங்கள் உள்ளன.
பரத நாட்டிய நிகழ்ச்சிகளில் ஆடப்பெறும் பிரபலமான சில பதங்களின் விவரங்களை இங்குக் காணலாம்.
பாடல்இராகம்தாளம்இயற்றியவர்தெருவில் வரானோகமாசுஆதிமுத்துத்தாண்டவர்நேற்றந்தி நேரத்திலேஉசேனிரூபகம்சுப்பராமய்யர்வலபு தாளஅடாணாமிச்ரசாபுகே்ஷத்ரக்ஞர்மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும் நாட்டிய உருப்படி தில்லானா, பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற பகுதிகளைக் கொண்டது. தில்லானா - திர்தில்லானா - தீம் திம் திரி திரி தில்லானா - போன்ற சொற்கட்டுகள் இந்த உருப்படி முழுவதும் இருக்கும். சரணப் பகுதியில் மட்டும் பாடல் இருக்கும். மத்திம காலத்தில் மிக விறுவிறுப்பாக ஆடப்படும். கண்ணையும் கருத்தையும்கவரும் கரண நிலைகள் (dance postures) தில்லானாவிற்கு அழகு சேர்க்கும். பரதநாட்டிய அரங்குகளில் பிரபலமான சில தில்லானாக்களின் விவரங்களை இங்குப் பார்க்கலாம்.
பாடல்இராகம்தாளம்இயற்றியவர்தீம்னத்ரு தீம்தீம்....காபி .....ஆதி.....தஞ்சாவூர்சின்னையா
தீம் ததிமித தோம்த...இந்தோளம்ஆதி.....க.என். தண்டபாணிப் ்பிள்ளை
நாத்ருத தீம்த . ...சிவரஞ்சனிஆதி.....மகாராஜபுரம்சந்தானம்
பல இராகங்களிலான ‘இராகமாலிகைத்’ தில்லானாக்கள் உள்ளன. பல்வேறு தாளங்களிலான தாளமாலிகைத் தில்லானாக்களும் உள்ளன.
தாளக் கட்டுப்பாடு இல்லாத ஓர் உருப்படி ‘விருத்தம்’. பாடகர் பாடலை இராக பாவம்ததும்ப நிதானமாகப் பாடுவார். ஆடுபவர் பாடலை அனுபவித்து நிதானமாக அபிநயம்செய்வார். சம்ஸ்கிருதத்தில் இந்த உருப்படி ‘ஸ்லோகம்’ எனப்படும். தெலுங்கில், "பத்யம்" என்று வழங்கப்படும். இது பக்திச் சுவைக்கு முதன்மை கொடுக்கும் நிகழ்ச்சி.
பரத நாட்டிய நிகழ்ச்சியில் இறுதியாக ‘மங்களம்’ இடம்பெறும். இதற்கெனத் தனி ஆடல்முறை எதுவுமில்லை. வாழ்த்துச் சொற்களைக் கொண்டது மங்களப் பாடல். இது மத்தியமாவதி, சுருட்டி அல்லது சௌராட்டிர இராகத்தில் இருக்கும். பாடகரும் பக்க இசையாளரும் மங்களப் பாடலை விறுவிறுப்பாக இசைப்பர். அப்பொழுது நாட்டியக் கலைஞர் ஆடல் தெய்வமான நடேசனை வணங்குவார். நாட்டிய ஆசான், பக்க இசையாளரை வணங்குவார். தொடர்ந்து சபையோர் அனைவரையும் வணங்குவார். நிகழ்ச்சி மங்களமாக நிறைவுறும்.