தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-- நவீனத்துவமும் பின்னை நவீனத்துவமும்

    • பாடம் - 2
      D06142 நவீனத்துவமும் பின்னை நவீனத்துவமும்

      இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

          இந்தப் பாடம் இலக்கியத் திறனாய்வின் புதிய பரிமாணங்கள் பற்றி்த் தொடர்ந்து பேசுகிறது. நவீனத்துவமும் பின்னை நவீனத்துவமும் தோன்றிய சூழல்கள் பற்றிப் பேசுகிறது. அவ்விரண்டின் உறவும், வேறுபாடும் பற்றிக் கூறுகிறது. அவ்விரண்டின் சாதனைகள் பற்றியும் பங்களிப்புகள் பற்றியும் கூறுகிறது. அவ்விரண்டின் நிலைப்பாடுகள், அடிப்படைகள், கொள்கைகள் பற்றிச் சொல்கிறது.

      இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

      • நவீனத்துவம், புதுமை என்ற நிலையில் எவ்வாறு இலக்கியத் திறனாய்விற்கு உதவியது என்பதை அறியலாம்.

      • தமிழின் தற்கால இலக்கிய உலகில், நவீனத்துவத்தின் தாக்கம், பயன் பற்றி அறியலாம்.

      • நவீனத்துவத்திற்கு மாறாக அல்லது எதிராகப் பின்னை நவீனத்துவம் அமைகிறது என்ற கருதுகோளை விளக்கமாக அறிந்து கொள்ளலாம்.

      • நவீனத்துவம், பின்னை நவீனத்துவம் ஆகிய இவ்விரண்டின் கொள்கையாளர்களையும் முன்னோடிகளையும் பற்றி அறிந்து கொள்ளலாம்.

      • கூறுபடுத்துதல், மையம், விளிம்பு, பெருங்கதையாடல் முதலியவை பற்றிப் பின்னை நவீனத்துவம் சொல்லும் கருத்துகளை அறிந்து கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:49:46(இந்திய நேரம்)