தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 1.7 தொகுப்புரை

    நண்பர்களே! இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன தெரிந்து கொண்டோம் என்பதை நினைவு படுத்திப் பாருங்கள்.

    உலக மொழிகளில் முதன்மை மொழிகளுள் ஒன்றாகக் கருதப்படும் தமிழ்மொழி 2500 ஆண்டு காலப் பழைய இலக்கியங்களைக் கொண்டது என்பதை நாம் அறிந்து கொண்டோம். தமிழ் வளர்ப்பதற்குப் பாண்டிய மன்னர்கள் ஓர் அமைப்பினை ஏற்படுத்தி வைத்திருந்தனர் என்பதையும், அவ் அமைப்பிற்குப் பிற்காலத்தில் சங்கம் என்ற பெயர் வழங்கப்பட்டது என்பதையும் தெரிந்து கொண்டோம்.

    அக்காலத்தில் புலவர்கள் பாடிய பாடல்கள் அகப்பாடல்கள், புறப்பாடல்கள் என்று பிரித்து அமைக்கப்பட்டன என்பதையும் புரிந்து கொண்டோம்.

    சங்கப் பாடல்கள் எட்டுத்தொகை நூல்கள் என்றும், பத்துப்பாட்டு என்றும் பிரிக்கப்பட்டமையை நாம் அறிந்து கொண்டோம்.

    சங்ககால வாழ்வியலையும், சங்க இலக்கிய யாப்பு, சங்க இலக்கியத்தில் உவமைகள் ஆகியவை பற்றியும் தெரிந்து கொண்டோம்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.
    சங்க இலக்கியங்களுக்கு இலக்கணமாக விளங்கிய நூல் எது?
    2.
    தொல்காப்பியம் எதற்குப் பயன்படுகிறது?
    3.
    எட்டுத்தொகையில் அகப்பாடல்கள் யாவை?
    4.
    பத்துப்பாட்டில் ஆற்றுப்படைப் பாடல்களைக் கூறுக.
    5.
    அறத்தொடு நிற்றல் என்றால் என்ன?
    6.
    கலிப்பா யாப்பில் அமைந்துள்ள எட்டுத்தொகை நூல் எது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 18:30:08(இந்திய நேரம்)