தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

தொகுப்புரை

  • 2.7 தொகுப்புரை

    அகத்திணைப் பாகுபாட்டினைத் தொல்காப்பியர் மிகவும் ஆழமாகப் பகுத்துக் கூறியிருக்கிறார். ஒவ்வொரு சூழலிலும் யார், யார் உரையாற்ற வேண்டும், என்ன செயல்கள் செய்யவேண்டும் என்பதை விளக்கியுரைத்துள்ளார்.

    பொருளதிகாரத்தில் உள்ள அகத்திணையியல், களவியல், கற்பியல் ஆகியவற்றில், காதல் தோன்றுவது முதலாகக் காதல் வாழ்வின் அனைத்துச் செய்திகளையும் கூறிவிடுகிறார். மேலும் மெய்ப்பாட்டியலில் அகத்திணைக்கு உரிய மெய்ப்பாடுகளையும் விளக்குகிறார்; பொருளியலிலும் அகத்திணையியலிலும் சொல்லாமல் விட்ட செய்திகளை எடுத்துரைக்கிறார்.

    சங்க இலக்கியங்கள் பெரும்பான்மையும் இத்தொல்காப்பிய அகத்திணைப் பாகுபாடுகளை அடிப்படையாகக் கொண்டே இயற்றப்பட்டுள்ளன.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.
    களவு என்றால் என்ன? - விளக்குக.
    2.
    களவு ஒழுக்கத்தின் வகைகளைக் கூறுக
    3.
    ‘இடந்தலைப்பாடு’ - விளக்குக.
    4.
    பாங்கொடு தழால் என்றால் என்ன?
    5.
    தோழியிற் புணர்வு - விளக்கம் தருக
    6.
    கற்பு என்றால் என்ன? - விளக்குக.
    7.
    தோழியின் பங்கு யாது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 19:09:21(இந்திய நேரம்)