Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
1)தமிழில் பின்னாக்கம் பற்றி விளக்குக.வினை ஆக்கம் பெறுவதனைப் பின்னாக்கம் என்பர். தமிழில் இத்தகைய பின்னாக்கம் அதிகமாக இல்லையெனினும் சமஸ்கிருதத்திலிருந்து கடன் வாங்கப்பட்ட சில பெயர்களிலிருந்து வினைகள் ஆக்கம் பெறுவதைப் பின்னாக்கம் என்று கூறலாம்
எடுத்துக்காட்டு:
போதனை (பெயர்) > போதி (வினை)
விசாரணை (பெயர்) > விசாரி (வினை)இங்கு போதனை, விசாரனை என்பன போத, விசார எனப் பின்னாக்கம் பெற்று இ என்ற வினையாக்கி மூலம் வினையாக்கம் பெற்றுள்ளன.