பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும்
முதலாழ்வார்கள் எனக் குறிப்பிடுவது
வைணவ மரபு. இம்மூவரும் திருமாலின் மீது கொண்ட
தீராக் காதலால் திருமாலின் அவதாரங்களையும் பல்வேறு அவதாரப் பெருமையையும்
விளக்கி இன்பங் காண்கின்றனர்.
திருமழிசை ஆழ்வார் திருமாலிடம் கொண்ட அளப்பரிய காதலால் யாதுமாகி
நின்ற திருமாலை மீண்டும் மீண்டும் கவிப்பொருளாக்கி மகிழ்கிறார்.
இவர்களின் பக்தியுணர்வால் பாசுரங்கள் தோன்றித்
தமிழ்
மேலும் வளம் பெற்றதை விளக்குகிறது இப்பாடம்.
இந்தப்
பாடத்தைப் படிப்பதால்என்ன பயன் பெறலாம்?
முதல் மூவர் என்று அழைக்கப்படும் ஆழ்வார்களை அடையாளங்
காணலாம்.
முதல் மூவர் அருளிய அந்தாதித் தொடையில் அமைந்த
திவ்யப் பிரபந்தங்களின் வழி அவர்கள் காட்டும் பக்திச் செழுமையைச்
சுட்டிக் காட்டலாம்.
திருமழிசை ஆழ்வார் அருளியவற்றுள் அகப் பொருள்
துறையில் அமைந்த பாசுரம் இருப்பதைத் தொகுத்துக் கொள்ளலாம்.
இந்த நான்கு ஆழ்வார்களின் அருளிச் செயல்களைப்
பட்டியலிடலாம்.
சாதாரண மனிதர்கள் பயன்படுத்தும் சொற்களின் பொருள் அல்லது அகராதி காட்டும்
பொருள,் பக்தி இலக்கியத்துள் பல்வேறுபட்ட பொருள்களைத் தருவதைப்
பகுத்துத்
தொகுத்துக் கொள்ளலாம்.