தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

தர அடிப்படையிலான இதழ்கள்

  • 2.3 தர அடிப்படையிலான இதழ்கள்

    இதழ்களில் வெளியாகும் செய்திகளின் அடிப்படையில் இதழ்கள் பகுக்கப்படுகின்றன. இவற்றைத் தன்மை அடிப்படைப் பகுப்பு (Quality) எனவும் கூறலாம். அவ்வகையில்
     

    (1)
    தரமான இதழ்கள்
    (2)
    மக்கள் இதழ்கள்
    (3)
    நச்சு இதழ்கள்

    என வகைப்படுத்தலாம்.

    • தரமான இதழ்கள்

    இலக்கியம், கலை, அறிவியல் தொடர்பான ஆழமான செய்திகளை வெளியிடும் ஆராய்ச்சி இதழ்களைத் தரமான இதழ்கள் என வரையறுக்கலாம்.
     

    சான்று :

    கலைமகள், செந்தமிழ்ச்செல்வி, கிஸான் வோர்ல்ட்


    • மக்கள் இதழ்கள்

    செய்திகள், கதை, கட்டுரை, திரைப்படம் எனப் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இதழ்களை மக்கள் இதழ்கள் எனலாம். பரவலான செல்வாக்குப் பெற்ற இதழ்கள் இவ்வகையினதாகும்.
     

    சான்று:

    குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம், கல்கி


    • நச்சு இதழ்கள்

    படிப்பவரின் மனத்தைக் கெடுக்கும் பாலியல் மற்றும் வன்முறைச் செய்திகளைத் தூண்டுபவை நச்சு இதழ்கள் எனப்படும் (Yellow Magazines). இவ்வகையான இதழ்களை அரசாங்கம் பறிமுதல் செய்கிறது. எனினும் இரகசியமான     முறையில் விற்பனையாகின்றன. எவ்வாறிருப்பினும், இவ்விதழ்கள் ஒழிக்கப்பட வேண்டியவை ஆகும்.


    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1.

    இதழ்கள் எந்தெந்த அடிப்படையில் பகுத்து வகைப்படுத்தப் படுகின்றன?

    2.

    நாளிதழ் என்றால் என்ன ?

    3.

    நாளிதழ்கள் அச்சிடப்பெறும் தாளின் அளவு யாது?

    4.

    மக்கள் இதழ்களுக்குச் சான்று தந்து விளக்குக.

    5.

    தரமான இதழ்கள் என்றால் என்ன?

புதுப்பிக்கபட்ட நாள் : 27-09-2017 13:35:08(இந்திய நேரம்)