Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
2.
இதழ்களில் கருத்துப் படங்கள் (Cartoons) குறித்துச் சிறுகுறிப்பு வரைக.
பொதுமக்களின் எண்ணங்களை எதிரொலிக்கும் வகையில் கருத்துப் படங்கள் இதழ்களில் இடம்பெறுகின்றன. இதில் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சொல் தொடர்களால் அமையும் தலையங்கத்தைப் போன்று, படங்களின் வாயிலாகக் கருத்தைத் தெரிவிப்பது கருத்துப் படம் ஆகும். தமிழில் ‘இந்தியா’ என்ற இதழில் முதன் முதலாகக் கருத்துப் படம் வெளியானது. கருத்துப் படங்கள் மக்களைச் சிந்திக்க வைக்க வேண்டும்.