தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5.5-தொகுப்புரை

  • 5.5 தொகுப்புரை


        சைவ சமயத்தின் சாத்திர நூல்கள் பற்றிய பொதுவான
    கருத்துகள் இப்பாடத்தில் தரப் பெற்றுள்ளன. சாத்திர நூல்கள்
    பதினான்கின் அமைப்பும் அவை தோன்றிய வரலாறுகளும் சுட்டிக்
    காட்டப் பெற்றுள்ளன. ஒரு சிலவற்றில் தத்துவக் கருத்துகள் ஒரு
    சில குறிப்புக்காகத் தரப் பெற்றுள்ளன. பதினான்கு சாத்திர நூல்கள்
    புலப்படுத்தும் சித்தாந்தக் கருத்துகள் தனித்தனியே நூல்களைப்
    படிக்கும் பொழுது புலனாகும். அவற்றைப் படித்து அறிந்து கொள்ள
    இப்பாடம் தூண்டுகோலாக அமையும். சைவ சித்தாந்தக்
    கொள்கையின் அடிப்படையான பதி (இறை), பசு (உயிர்), பாசம்
    (மலங்கள்) என்ற முப்பொருளின் தத்துவக் கொள்கைகளை அறிந்து
    கொள்ள இப்பாடத்தில் இடம் பெற்றுள்ள சாத்திர நூல்கள் கருவிகள்
    ஆகும் என்பதை இப்பாடத்தின்வழி அறிந்து கொள்ளலாம்.


    தன்மதிப்பீடு : வினாக்கள் - II

    1.
    சிவஞானபோதத்தின் வழிநூல் யாது?
    2.
    சிவஞான போதத்தில் உள்ள சூத்திரங்கள் எத்தனை?
    3.
    சிவஞான சித்தியார் எத்தனை பிரிவுகளைக் கொண்டது?
    அவை யாவை?
    4.
    சைவ சித்தாந்த அட்டகம் என்பதில் அடங்கியுள்ள
    நூல்கள் யாவை?
    5.
    கொடிக்கவி எத்தனை பாடல்களைக் கொண்டது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:26:06(இந்திய நேரம்)