Primary tabs
-
6.0 பாட முன்னுரை
உலக வாழ்க்கை சக்கரம் போன்றது. உயிர்கள்
பிறக்கின்றன; வளர்கின்றன; மூப்பு அடைகின்றன; இறக்கின்றன;
பின்னர் மீண்டும் பிறக்கின்றன. இவ்வாறு மாறாமல் சுற்றிக்
கொண்டிருக்கும் வாழ்க்கை என்னும் சக்கரத்தில் உலக உயிர்கள்
துன்பத்தில் தவிக்கின்றன. உயிர்கள் படும் துன்பத்தைப் புத்தர்
கண்டார். உலக உயிர்கள் படும் துன்பத்திற்குக் காரணங்கள்
எவை என்பது பற்றி ஆழ்ந்து சிந்தித்தார். தம் தவ வலிமையால்
உலக உயிர்கள் படும் துன்பத்திற்கான காரணங்களைக்
கண்டறிந்தார். புத்தர் கண்டறிந்த இவை பௌத்தத்
தத்துவங்களாகப் போற்றப்படுகின்றன. மாணவர்களாகிய நீங்கள்
இத் தத்துவங்கள் பற்றி இப்பாடத்தில் படிக்கப் போகிறீர்கள்.