Primary tabs
-
6.5 தொகுப்புரை
மாணவர்களே! இப்பாடத்தின்கண் பௌத்தமதத் தத்துவக்
கருத்துகள் பற்றிப் படித்தீர்கள். பௌத்தர்களின் பன்னிரண்டு
நிதானங்கள், அவற்றைக் காட்டும் ஊழ் வட்டம், நான்கு
சத்தியங்கள், அஷ்டாங்க மார்க்கம், பஞ்ச சீலம், அஷ்டாங்க
சீலம், தசசீலம் உள்ளிட்ட தத்துவக் கருத்துகள் சுருக்கமாக
இப்பாடத்தின்கண் விவரிக்கப்பட்டுள்ளன. இவற்றைக்
கற்றுணர்ந்து செயற்பட முயலுங்கள்.